சண்டை இல்லாமல் நடந்து முடிந்த தலைவர் போட்டி...காரணம் அபிஷேக் தானா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரத்திற்கான தலைவர் பதவியை நேற்று மதுமிதா கைப்பற்றி விட்டார்.

இரண்டு வாரங்களில் இல்லாத வகையில் நேற்றைய தலைவர் போட்டிகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது.

அபிஷேக் ராஜா நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது தான் இதற்கு காரணமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தலைவர் போட்டி

தலைவர் போட்டி

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இதுவரைக்கும் மூன்று வாரங்கள் முடிவடைந்து உள்ளது. நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டிகள் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் இதுவரைக்கும் இல்லாத வகையில் ஜாலியாகவும் விருவிருப்பாகவும் இந்த போட்டி நடந்து முடிந்திருக்கிறது.

போன வாரம் அப்படி இந்த வாரம் இப்படி

போன வாரம் அப்படி இந்த வாரம் இப்படி

கடந்த வாரத்தில் சிரிச்சா போச்சு எனும் டாஸ்கில் அபிஷேக் ராஜா செய்த அலப்பறைகள் ரசிகர்கள் பலருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தது என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இந்த வாரத்தில் கூடி இருந்து, இருந்த இடத்தில் இருந்தே விளையாடும் போட்டியை எளிமையாக வைத்திருந்தனர். ஆனாலும் அதிலும் எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாமல் நார்மலாகவே சென்றுகொண்டிருந்தது. இது ரசிகர்களுக்கு சலிப்பாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.

ப்ரமோக்கு பஞ்சம்

ப்ரமோக்கு பஞ்சம்

அபிஷேக் ராஜா இருந்தவரைக்கும் ப்ரமோ களில் அதிகமாக அவருடைய முகம் தான் இடம்பெற்றுவரும். அதுமட்டுமல்லாமல் ப்ரமோக்கள் ஒவ்வொன்றும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து கொண்டிருந்தது. ஆனால் நேற்றைய எபிசோட்க்கு 2 ப்ரமோக்கள் மட்டும் தான் வந்து இருந்ததே தவிர மூன்றாவது ப்ரமோ இல்லை. ஏற்கனவே அபிஷேக் வெளியே செல்லும் போது ரசிகர்கள் சொன்ன மாதிரியே இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது என பலர் கூறி வருகின்றனர்.

காரணம் அபிஷேக் தானா

காரணம் அபிஷேக் தானா

அபிஷேக் வெளியே செல்லும்போது ரசிகர்கள் இனி எடிட்டருக்கு வேலை இல்லாமல் இருக்குமே என்றுதான் பீல் பண்ணி வந்தனர். ஆனால் அது போல தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த வாரம் தலைவர் பதவிக்கான போட்டியில் கூட சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் ஜாலியாக போட்டியாளர்கள் இருந்து கொண்டிருந்தார்களாம் என்று ரசிகர்கள் பீல் பண்ணி கொண்டு இருக்கும்போது, சில ரசிகர்கள் அபிஷேக் இல்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சி ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறது, அபிஷேக் இருந்திருந்தால் ஒரு எரிச்சல் இருக்குமே என்று தங்கள் பங்குக்கு அபிஷேக் மீதுள்ள வெறுப்பை காட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+