For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Thenmozhi BA Serial: விஏஓ சார்... நீங்க விருமாண்டி படம் பார்க்கலையா?

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும்? இது கிராமத்து பெண்ணான தேன்மொழிக்கு புரிந்து இருக்கிறது. அவள் மனத்துக்குள் இப்போது ஹீரோவாக இருப்பவர் அருள்வேல், ஸீரோவாக இருப்பவர் விஏஓ அரவிந்த்.

அருள்வேல் மேல் அவளுக்கு ஆசை காதல் என்று எதுவும் இல்லை. அவன் அடிக்கிறான், பின்னர் அடித்தவனுக்கே பணமும் கொடுக்கிறான். போனால் போகட்டும் என்று மன்னித்தும் விடுகிறான்.

அதாவது ஒரு சினிமா ஹீரோவுக்கு உள்ள அத்தனை குவாலிட்டியும் அருள்வேலிடம் இருப்பதால், அவளைப் பொறுத்தவரை சினிமா ஹீரோவை ஒரு ரசிகை ரசிப்பது போலத்தான் தேன்மொழி அருள்வேலை ஒரு ஹீரோவாக ரசிக்கிறாள்.

அரவிந்த் ஸ்டிரிக்ட்

அரவிந்த் ஸ்டிரிக்ட்

அந்த ஊருக்கு புதிய விஏஓவாக அரவிந்த் தனது பெண் குழந்தையுடன் வருகிறான். அவனது மனைவி வர பல நாட்களாகும் என்பதால், தேன்மொழி அப்பாவிடம் தனக்கு கார் ஓட்ட வேண்டுமென்று கேட்கிறார் . அதோடு கூடவே வீட்டு சாப்பாடும் வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை உடல் நலம் கெட்டுப் போகும் என்றும் கேட்கிறான்.

அப்பா தேன்மொழி

அப்பா தேன்மொழி

அப்பா தேன்மொழி ஓகே சொல்லிவிட,தேன்மொழி சமைக்க மாட்டாள்.பள்ளிக்கு போகும் அவளது தங்கை சமைத்து கொடுக்க, அதை டூ வீலரில் கொண்டு வந்து கொடுக்க கூட வலிக்கிறது தேன் மொழிக்கு. குழந்தையை பார்த்துக்க சொல்லுங்க சார். அவளை தனியா விட்டுட்டு ரொம்ப தூரம் போக வேண்டி இருக்குன்னு அரவிந்த் சொல்ல, அப்பாவும் தேன்மொழியிடம், பாப்பாவை பார்த்துக்கோ.அப்போதான் விஏஓவுக்கு கேப் ஓட்டும் வேலை கிடைக்கும்னு சொல்றார்.

தல படம்

தல படம்

தேன்மொழி தல படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி வச்சு இருக்கேன். வா போயிட்டு வரலாம்னு நண்பன் கூப்பிட, இல்லை.. என்னால முடியாது. விஏஓ பாப்பாவை பார்த்துக்கணும்னு சொல்லிட்டு, என்னை தல படத்தை பார்க்க முடியாம செய்த விஏஓ வுக்கு சரியான தண்டனை குடுத்து ,நம்ம வீட்டு சாப்பாடே வேணாம்னு சொல்ற அளவுக்கு செய்யணும்னு குலாப் ஜாமூனில் மிளகாய் தூள் கரைத்த தண்ணீரை சிரிஞ் மூலம் ஏத்திவிடுகிறாள்.

ஓகே குழந்தை

ஓகே குழந்தை

தல படத்துக்கு போகாம உன் கூட இப்படி விளையாடறது எனக்கு சேடா இருக்கு பேபின்னு சொல்ல, தேன்மொழி நீ சினிமாவுக்கு போ. நான் தனியா இருந்துப்பேன். ஹோம் வொர்க் பண்ணுவேன்.டிவி பார்ப்பேன்னு சொல்லுது. சரின்னு நம்பி..பாப்பா அந்த குலாப் ஜாமூன் அப்பாவுக்கு மட்டும்தான்., அதை நீ சாப்பிட கூடாது. உன்னோட பங்கை நான் குடுத்திட்டேன்.. இது அப்பா பங்குன்னு சொல்றா.

ஜாமூன் காரம்

ஜாமூன் காரம்

கார ஜாமூனை குழந்தை எடுத்து ஆசையாக சாப்பிட்டுவிட, வீசிங் அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அளவுக்கு நிலைமை சீரியஸ்.. மனசு கேட்காமல் தல படம் பார்க்கமல் குழந்தையை பார்க்க வந்த தேன்மொழிக்கு அதிர்ச்சி. விஏஓ கண்டபடி திட்டுகிறார். வீட்டுக்கு வர கூடாதுன்னு துரத்தறார்.

திரும்ப ஒருமுறை

திரும்ப ஒருமுறை

தேன்மொழி வீட்டுக்கு போயிட்டு திரும்ப ஒருமுறை வந்து, சார் என்னை பாப்பா கூட பேச வேணாம்னு மட்டும் சொல்லிடாதீங்க. நீங்க விருமாண்டி படம் பார்த்ததில்லையா? அதுல கமல் சார் மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன்.மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மாமனுஷன்னு சொல்லி இருக்கார் உங்களுக்கு தெரியாதான்னு கேட்கிறாள்.

அழுது ஆர்ப்பாட்டம்

அழுது ஆர்ப்பாட்டம்

அப்பா தேன்மொழியை உள்ளே வர சொல்லுங்கப்பான்னு பாப்பா சொல்ல, தேன்மொழி வருகிறாள், அவள் கையில் இருந்த கிளிசரின் பாட்டில் கீழே விழுகிறது. பின்னே விஏஓ அரவிந்துக்கு எப்படி கோவம் வரும். கிளிசரினை போட்டுக்கிட்டு அழுது சிம்பதி கிரியேட் பண்றியான்னு கேட்கிறார். ஆண்டாண்டு காலம் புரண்டு புரண்டு அழுதாலும் எனக்கு அழுகை வரத்து சார் .. என்ன பண்றதுன்னு கேட்கிறாள். தேன்மொழிக்கு ஏற்ற மாதிரியான சின்ன சின்ன வசனங்கள் நன்றாக இருக்கிறது.

English summary
How to be a Hero This is understandable for the village woman's honeymoon. Arulvel, who is now a hero in her mind, is a hero, VAO Aravind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X