முகத்தை எப்போதும் மூடி வைக்காதே பாடலில் நடித்த நடிகையா இது? ஆளே மாறிட்டாரே.. மகனோடு நெகிழ்ச்சி போஸ்ட்
சென்னை: நடிகர் சக்தி நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கௌரி முன்ஜாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய மகனோடு எடுத்த புகைப்படங்களை கௌரி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரைட் திரைப்படங்களில் நடித்த நடிகைகளை பல வருடங்கள் கழித்து பார்க்கும்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் அப்போது இருந்த மாதிரியே இப்போதும் இருக்கிறார்கள். சில நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் அவர்களை ரசிகர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள்.

காணாமல் போன நடிகை
அவர்கள் நடித்த திரைப்படங்கள் பாடல் காட்சிகள் பார்க்கும்போதெல்லாம் இவர்கள் எங்கே போனார்? காணவில்லையே? என்று தேடி வருகிறார்கள். அதுபோலத்தான் நடிகர் சக்தி நடிப்பில் வாசு இயக்கத்தில் வெளியான தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் இடம்பெற்ற "முகத்தை எப்போது மூடி வைக்காதே" என்ற பாடல் அந்த நேரத்தில் கல்லூரி படிக்கும் இளைஞர்களின் எவர்கின் கிரீன் பாடலாக இருந்தது.
யுவன் சங்கர் ராஜா பாடல்
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடலுமே ரசிகர்களுக்கு ஃபேவரைட் தான். இந்த திரைப்படத்தில் முகத்தை காட்டாமலே சக்தியை சுற்றவிடும் கேரக்டரில் நடிகை கௌரி முன்ஜால் நடித்திருப்பார். ஆனால் அந்த பாட்டுக்கு இடையில் பஸ்ஸில் வைத்து அவருடைய முகத்தை சக்தி பார்த்து விடுவார். இந்த க்யூட்டான காட்சி பலருக்கும் பிடித்திருக்கும். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் "அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா" பாடல் அந்த நேரத்தில் பெரிய அளவில் ட்ரெண்டானது.

தொட்டால் பூ மலரும் பட நடிகை
கௌரி முன்ஜால் 1985 டெல்லியில் தான் பிறந்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் தான் முதல் முதலாக அறிமுகமாகி இருக்கிறார். அதற்குப் பிறகு தமிழில் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் 2007 ஆம் ஆண்டு நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவ் நடிப்பில் வெளியான சிங்கக்குட்டி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கடைசி திரைப்படம்
அடுத்ததாக தொடர்ந்து இவர் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிறகு தமிழில் இருந்து காணாமல் போனார். ஆனால் தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ரேஸ் என்ற திரைப்படம் தான் இவர் கடைசியாக நடித்த திரைப்படம்.
மகனோடு புகைப்படம்
இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது இருந்த அதே தோற்றம் இல்லாவிட்டாலும் இவரை இப்போதும் அடையாளம் காண முடிகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் தன்னுடைய மகனோடு தான் அதிகமான புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
நீண்ட நாள் நட்பு
தன்னுடைய மகன் புகைப்படங்களை பகிரும் போது இவன்தான் என்னுடைய உலகம், என்னுடைய சந்தோஷத்தின் காரணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதுபோல ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ப்ரீத்தா உடனும் இருக்கிறார். தன்னுடைய நீண்ட நாள் நட்பு என்று பிரீத்தாவை குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications