திரிஷா எனக்கு ஃப்ரெண்ட் கிடையாது.. எங்களுக்குள்ள இந்த பிரச்சனை இருக்கு! ஓபனாக பேசிய நயன்தாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நடிகை திரிஷா எனக்கு ப்ரெண்ட் எல்லாம் கிடையாது என்று கூறியிருக்கிறார். அதோடு தங்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை குறித்தும் நயன்தாரா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

நடிகை நயன்தாரா பற்றிய பேச்சுகள் இணையத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர் சமீபத்தில் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை தயாரித்து வரும் நயன்தாரா தன்னுடைய கணவரோடு அந்த பொருள்களுக்கான விளம்பரத்தையும் செய்து கொண்டிருக்கிறார்.

Television Nayanthara Trisha

அதுபோல சமீபத்தில் கூட மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்ட போது அங்கிருந்த ஒருவர் நயன்தாரா நம்மைப் போல சாதாரணவங்க கிடையாது என்று சொன்னது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய திருமண ஆவணப்படத்தில் தானும் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனும் முதல் முறை சந்தித்துக்கொண்ட நானும் ரவுடிதான் திரைப்பட காட்சிகள் ஒரு நிமிடம் பயன்படுத்தியதற்காக தனுஷ் தன்னிடம் நஷ்ட ஈடு கேட்கிறார் என்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதற்குப் பிறகு நயன்தாராவின் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்தாலும் தனுஷின் ரசிகர்கள் நயன்தாரா பற்றி அதிகமான நெகட்டிவ் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை திரிஷா நீங்கள் எல்லோரும் ஒரே காலத்தில் ட்ரெண்டிங் நடிகைகளாக இருக்கீங்களே? நீங்க எல்லாம் பிரண்ட்ஸா தான இருக்கீங்க என்று தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார்.

Television Nayanthara Trisha

அதற்கு நயன்தாரா அப்படி எல்லாம் கிடையாது. நானும் திரிஷாவும் ஒன்றாக நடிக்கிறோம் அவ்வளவுதான். ஆனால் ஃப்ரெண்ட் எல்லாம் கிடையாது. பொதுவாகவே இரண்டு பெண்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்றால் நானா நீயா என்ற ஒரு போட்டி வரும். அதுபோலத்தான் பலருடைய மனதில் இருக்கிறது அதற்கு நாம ஒன்னும் செய்ய முடியாது.

ஆனால் எனக்கு அந்த மாதிரி போட்டி பொறாமை எல்லாம் கிடையாது. யாராவது என்னிடம் போட்டி போட்டாலும் நான் அதை கண்டுக்க மாட்டேன். இவங்க இப்படித்தான் என்று கடந்து போய் விடுவேன் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இது பில்லா, வல்லவன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் பேசிய வீடியோ போல தெரிகிறது. ஆனால் அது இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

ஏற்கனவே திரிஷா சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் அரசியலில் அவர் என்ட்ரி கொடுக்கப் போவதாகவும் சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தது. அது குறித்து த்ரிஷாவின் அம்மா பதில் கொடுத்திருந்தார். அதில் திரிஷா கண்டிப்பாக சினிமாவை விட்டு விலக மாட்டார். அவர் உயிர் உள்ளவரை சினிமாவில் நடித்துக் கொண்டே இருப்பார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் த்ரிஷா பற்றி நயன்தாரா பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+