மண்டைக்கேறிய போதை.. பண்ணை வீட்டில் இந்த பாடகி? டக்னு வந்த போலீஸ்.. அரசியல் காழ்ப்புணர்ச்சி?: பிரபலம்
சென்னை: பிரபல பாடகி மங்லி பாடியிருக்கும் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.. இவர் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு மட்டும் சுமார் 3.3 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.. தக் லைஃப் படத்தில் இவரது தெலுங்கு பாடல் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.. சமீபத்தில் தன்னுடைய 31வது பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது அம்பலமானது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபைர், தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சுபைர், சத்யவதி சவுகான் என்பதுதான் அவரது நிஜப்பெயர்.. மங்லி என்று வைத்து கொண்டார்.. 31 வயதாகிறது.. தெலுங்கு படங்களில் நிறைய பாடியிருக்கிறார். ஆல்பம் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.. அரசியல் பின்புலமும் கொண்டவர்.

கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரிய பக்தி சேனலில், அட்வைஸராகவும் மங்லி இருந்திருக்கிறார்.. இதனால் அரசியல் பிரமுகர்களிடமும் நல்ல செல்வாக்கில் உள்ளார்.. இப்போது முழுக்க முழுக்க சினிமா கச்சேரி, ஆல்பம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்..
ரிசார்ட் பிறந்தநாள்
தக் லைஃப் படத்தின் தெலுங்கு பாடலை இவர் பாடியிருக்கிறார். தன்னுடைய 31வது பிறந்தநாள் விழாவை ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட்டில் கொண்டாயிருக்கிறார் மங்லி.. இந்த பிறந்தநாள் விழாவில் சினிமா பிரபலங்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பண்ணை ரிசார்ட்டில் டி.ஜே. நிகழ்ச்சியுடன் இந்த விழா நடத்தியதால், திடீரென போலீஸ் உள்ளே வந்துவிட்டது.. டிஜே நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால், அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும். ஆனால், பாடகி அதற்கான அனுமதியை பெறவில்லை என தெரிகிறது.
பண்ணை வீடு
பார்ட்டி நடத்துவதற்கான அனுமதியை பெறவில்லை என்றும், போதை பொருள் பயன்படுத்துவதாகவும் புகார் வந்துள்ளதாக கூறி, சோதனை மேற்கொண்டுள்ளது.. மொத்தம் 48 பேர் அந்த பண்ணை வீட்டில் இருந்துள்ளனர்.. இதில் 9 பேர் கஞ்சா பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.. இதனை தவிர வெளிநாட்டிலிருந்து தடை செய்யப்பட்ட சில போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது..
இறுதியில் 48 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலரை கைது செய்துள்ளனர்.. சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. பாடகி மங்லி மீது மட்டும் இல்லாமல் ரிசார்ட் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் போலீசார் சோதனைக்கு வந்தபோதே, மங்லி வாக்குவாதம் செய்தாராம்.. ஆனாலும் போலீசார் மங்லியை மீறித்தான் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளனர்..
ஜெகன் மோகன் ரெட்டி
ஆனால், மங்லிக்கு ஒரு தரப்பில் ஆதரவு கூடிவருகிறது.. காரணம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர் என்பதால்தான், மங்லியை வேண்டுமென்றே பழிவாங்குகிறார்கள், அவரது நற்பெயரை குலைக்க முயற்சிக்கிறார்கள் என்று புகார்கள் கூறுகிறார்கள்.. இதனால் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் பரபரப்பு நிலவுகிறது.
சினிமா பிரபலங்கள் பலரும் பண்ணை வீட்டில் பார்ட்டி செய்வது சகஜமாகிவிட்டது.. எனவே, மங்லி மீது தேவையின்றி களங்கம் சுமத்தப்பட்டுள்ளது என்கிறார்கள் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள்..
கஞ்சா பார்ட்டி
மறுபுறம், ஆன்மீக சேனலுக்கு அட்வைஸராக இருந்தவர், எதற்காக கஞ்சாவை பார்ட்டியில் பயன்படுத்த வேண்டும்? அப்படி கஞ்சா பிடிபட்டது உண்மையானால் அது சட்டப்படி தவறுதான் என்றும் ஆளும் கட்சியில் இதேபோன்ற கஞ்சா பார்ட்டி நடந்தால் அங்கேயும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தற்போது, மங்லி சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications