டிக் டாக் இலக்கியா விவகாரத்தில் திடீர் திருப்பம்.. மாயமான திலீப் சுப்பராயன் பதிவு.. நடந்தது என்ன?
சென்னை: டிக்டாக் பிரபலம் இலக்கியா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரால்தான், இப்படியொரு முடிவை எடுத்ததாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.. ஆனால், இதுவரை இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.. சம்பந்தப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரும் இதுகுறித்த விளக்கத்தையும், மறுப்பையும், இதுவரை சொல்லவில்லை.. எனவே இலக்கியா விவகாரம் மிகப்பெரிய குழப்பத்தையும், பரபரப்பையும் சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி வருகிறது.
டிக்டாக் இலக்கியா பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் பூந்தமல்லியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..

ஆனால் இலக்கியாவுடன் இருந்த நபர், அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றிருக்கிறார். தற்போது தீவிர சிகிச்சை அவருக்கு தரப்பட்டு வருகிறது..
நேற்றைய தினம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது இலக்கியா.. பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்ததாக செய்திகள் பரபரக்கின்றன அது சம்பந்தமான ஸ்கிரீன் ஷாட்களை, இலக்கியாவின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
திலீப் சுப்பராயன்
அதில், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னுடைய சாவுக்கு திலீப் சுப்பராயன் தான் காரணம் என்றும் பதிவாகியிருந்தது.
"6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்டால் என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து, இப்ப என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்" என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டு,அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவும் ஷேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதனை பதிவு செய்தது இலக்கியா தானா? என்று தெரியவில்லை.. எனினும், இந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி கொண்டிருக்கிறது..
டிக்டாக் இலக்கியா தற்கொலை முயற்சி?
நேற்றைய தினம், திலீப் சுப்பராயன் மீது புகாரை சொல்லிவிட்டு, இன்றைய தினமே இலக்கியா மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளது, பெரும் குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறது.
எனவே, இலக்கியா தற்கொலைக்கு முயன்றாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது .இலக்கியாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதாக கூறுகிறார்கள்.. அப்படியானால், அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டுதான் தற்கொலைக்கு முயன்றாரா? என்றும் சந்தேகம் கிளம்பியிருக்கிறது.
வழக்கமாக இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டு டெலிட் செய்துவிடுவாராம் இலக்கியா.. அப்படியிருக்கும்போது, இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை இலக்கியா முன்வைத்தது உண்மையா? என்று தெரியவில்லை.
இலக்கியா காதில், கண்ணில் ரத்தம்?
"கடந்த வாரம் இலக்கியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கண்கள், காதுகளில் ரத்தம் வருவது போல யாரோ அவரை பயங்கரமாக அடித்து தாக்குவது போன்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார்" என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் பதிவிட்டுள்ளது அதைவிட குழப்பத்தை கிளப்பிவிட்டுள்ளது..
நேற்றைய தினமே இன்ஸ்டாவில் இலக்கியா போஸ்ட் போட்டிருந்த நிலையில், இலக்கியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இதுவரை எந்தவித விளக்கமும் தரவில்லை.. தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.. போலீஸ் தரப்பிலும் இது தற்கொலை முயற்சி என்று இதுவரை சொல்லவில்லை.. எனவே, தற்போதுவரை இலக்கியா விவகாரம், குழப்பமாகவே உள்ளது.
அந்த இன்ஸ்டா பதிவு குறித்து, காவல்துறை தரப்பில், திலீப் சுப்பராயன், அல்லது காவல்துறை தரப்பில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கினால்தான், இதன் உண்மைத்தன்மை தெரியவரும்.
சூப்பர் சுப்பராயன் மகன்
இலக்கியா குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், சூப்பர் சுப்பராயனின் மகனாவார்.. இவரும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இவர் தான் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
நேற்று வெளியாகியிருக்கும், ஹரி ஹர வீர மல்லு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர்தான். இந்நிலையில் இவர் மீது இலக்கியா தந்துள்ள குற்றச்சாட்டு கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications