"இப்படியே இருங்க, மாறிடாதீங்க".. இலக்கியாவை பார்த்துமே திகைத்த ரசிகர்கள்.. மாறி மாறி அட்வைஸ்.. ஏன்?
சென்னை: இலக்கியாவின் போட்டோ ஒன்று, சோஷியல் மீடியாவில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.. கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வந்த டிக்டாக் இலக்கியாவுக்கு அவரது ரசிகர்கள் அட்வைஸ் ஒன்றையும் தந்திருக்கிறார்கள். அது என்ன?
டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா.. டபுள் மீனிங்கில் வீடியோக்களை வெளியிட்டு, அதன்மூலம் ஏராளமாக ரசிகர்களை பெற்றார்.. அரைகுறை ஆடையுடன் ஆட்டம், பாட்டம், நடிப்பு என ஒவ்வொரு வீடியோவையும் இலக்கியா வெளியிட்டு, குறுகிய காலத்திலேயே புகழ்பெற்ற டிக்டாக் ஸ்டாராகிவிட்டார்.

டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகும் கூட தன்னுடைய பிற சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற வீடியோக்களையே வெளியிட்டு வந்தார்.. பிறகு இலக்கியாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
சினிமா வாய்ப்பு: "நீ சுடத்தான் வந்தியா" என்ற படத்தில் நடித்ததுடன், வேறு சில படங்களிலும் சிறிய கேரக்டர்களில் நடித்தார்.. ஆனால், படவாய்ப்பு தருவதாக கூறி பலர் படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதால், சினிமாவும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டாராம்.
கடந்த வருடம் நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இலக்கியா, "3ம் வகுப்பு படிக்கும்போது தன்னுடைய அம்மா இறந்து, அப்பா 2வது திருமணம் செய்து கொண்டதால் தன்னுடைய வாழ்க்கையே திசை மாறிவிட்டதாகவும், அம்மா இருந்திருந்தால் தன்னுடைய வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும், காதலிப்பதாக கூறி பழகி, துரோகத்துக்கு ஆளானதாகவும் என்றும் கண்ணீருடன் கூறியிருந்தார்.
குக்கிங் சேனல்: தற்போது இலக்கியா குக்கிங் சேனல் ஒன்றை துவங்கி, நல்ல ஆதரவையும் பெற்று வருகிறார்.. ஆனால், டீசன்ட்டான ஆடைகளை அணிந்து வீடியோக்களை அதில் பதிவிட்டு வருகிறார்.
இதுகுறித்து மற்றொரு பேட்டியில் ஷகீலாவிடம் இலக்கியா சொன்னபோது, என்னுடைய குக்கிங் சேனலுக்கு மக்களின் பேராதரவை நான் எதிர்பார்க்கவில்லை... 8 வயதிலிருந்தே நான் சமைத்து வருகிறேன். சமையல் எனக்கு பிடித்த விஷயம் என்பதால், அதை இப்போது கையில் எடுத்துள்ளேன்.. அதனால்தான், கவர்ச்சி வீடியோ வெளியிடுவதில்லை.
வேதனை : அப்படின்னா இனிமேல் கவர்ச்சி காட்ட மாட்டியா? பத்தினி வேஷம் போடாதே? என்றெல்லாம கமெண்ட்கள் வருவதை பார்த்து வருத்தமாக இருப்பதாகவும் ஷகிலாவிடம் வேதனை தெரிவித்திருந்தார் இலக்கியா.
இந்நிலையில், இலக்கியாவின் சமீபத்திய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. பிங்க் நிற பட்டுப்புடவை, இடுப்பில் ஒட்டியாணம், கழுத்து நிறைய நகை, கம்மல் ஜிமிக்கி, மல்லிகைப்பூ என கல்யாண பெண்ணை போலவே ஜொலிக்கிறார்.. இந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.
அதிக கவர்ச்சி: "நீங்கள் ரொம்ப அதிகமாகவே கவர்ச்சி காட்டுகிறீர்களே? அது உங்களுக்கு தப்பாக தெரியவில்லையா?" என்று இலக்கியாவிடம் ஷகிலா கேட்டிருந்தார்..

அதற்கு இலக்கியா, "நான் முதலில் ஒழுங்காகத்தான் வீடியோ பண்ணேன்.. ஆனால், லைக்ஸ் வரவில்லை.. கவர்ச்சி காட்ட ஆரம்பித்த பிறகுதான் ஏகப்பட்ட லைக்ஸ் குவிய ஆரம்பித்தது. இப்படி என்னுடைய வீடியோக்களுக்கு லைக்ஸ் வருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இதற்காகவே தேடித்தேடி கிளாமர் அதிகம் உள்ள பாட்டுகளை மட்டும் தான் தேர்ந்தெடுத்து வீடியோ பண்ணுகிறேன். இது எனக்கு பிடிச்சிருக்கு" என்று கூறியிருந்தார்.
அட்வைஸ் : ஆனால், கல்யாண பெண் போல இலக்கியா தற்போது ஷேர் செய்திருக்கும் போட்டோக்களுக்கு, ஏகப்பட்ட லைக்ஸ்கள் கிடைத்து வருகின்றன.. "இப்படியே இரு இலக்கியா" என்று உரிமையுடன் அவரது ரசிகர்கள் அட்வைஸ் தந்து வருகிறார்கள்.
இதேபோல, சமீபத்தில், வரலட்சுமி விரதம் இருந்து, வீட்டில் பூஜை செய்திருந்தார் இலக்கியா.. அந்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார்.. பச்சை நிற பட்டுப்புடவையை தழையத்தழைய கட்டி, தலையில் மல்லிகைப்பூ, நகைகளுடன் அழகாக போஸ் கொடுத்திருந்தார்.. அந்த போட்டோவுக்களும் இப்படிதான் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications