இன்றைய "பாக்கியலட்சுமி” சொதப்பல்கள்.. இது நம்பற மாதிரியா இருக்கு? அய்..யோ இவங்களுக்கு என்ன ஆச்சு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காலையில் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகிவிட்டது.
அதில் பல சொதப்பல்கள் இன்றைய எபிசோட்டில் இடம் பிடித்திருக்கிறது. இதை தெரிந்து செய்தார்களா? அல்லது தெரியாமல் விட்டு விட்டார்களா என்று குழப்பமாக இருக்கிறது.
அப்படி என்னதான் நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்காக தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். பாக்கியலட்சுமியின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டும் விதமாகவே பல பெண்கள் இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். அதிலும் பெண்கள் மட்டுமல்லாமல் தற்போது பல ஆண்களும் கூட இந்த சீரியலை தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
தன்னை விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து பல ஆண்டுகளாக தனக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் தராமல் இருந்த கோபி தன்னை விட்டு போனால், அதை நினைத்து கவலைப்பட்டு வீட்டில் முடங்கி இருக்காமல் தன்னுடைய சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பாக்யா அதிரடியாக தன்னை தைரியமாக மாற்றிக் கொண்டு, தன்னை சுற்றி இருக்கும் சூழ்நிலையும் தனக்கு சாதகமாக மாற்றி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து கொண்டு இருக்கிறார்.

இதனால்தான் மற்ற சீரியல்களை விடவும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனித்துவமாக தெரிவதால் டிஆர்பியில் விஜய் டிவியில் முதல் இடத்தை பல மாதங்களாகவே பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய அதாவது ஜூலை 19ஆம் தேதி காண எபிசோடில் பாக்கியலட்சுமி சீரியலில் சில சொதப்பல்கள் நடந்திருக்கிறது.
இனியா இன்று 12th ரிசல்ட்காக காத்திருக்கிறார். அப்போது வீட்டை விட்டு கிளம்பும் பாக்யாவிடம் பத்து மணிக்கு ரிசல்ட் வந்துவிடும் அதற்குள் வீட்டிற்கு வந்து விடுங்கள் என்று இனியா கூறி அனுப்பி வைக்கிறார். அதே நேரத்தில் நான் கண்டிப்பாக வந்து விடுவேன் என்று வீட்டை விட்டு கிளம்பிய பாக்கியா மண்டபத்திற்கு செல்லும் போதே அங்கே பொழுது விடிந்து அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்போது தான் கல்யாண வீட்டில் இவருக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் இது நிச்சயதார்த்த வீடு என்றும் இங்கு 50 பேருக்கு சமையல் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
எந்த ஒரு சமையல் காண்ட்ராக்டரும் மண்டபத்திற்கு போய் தான் நிச்சயதார்த்தம் என்பது தெரிந்து கொண்டும் அதேபோல எத்தனை பேருக்கு சமையல் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டதும் வரலாற்றிலே கிடையாது. ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடந்திருக்கிறது. அதுபோல கொஞ்சம் காய்கறிகளை வைத்து பெரிய பாத்திரத்தை வைத்து சமைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு 5000 பேருக்கு சமையல் செய்யும்போது இதே அளவு தான் காய்கறிகள் பயன்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் நொடிக்கு ஒருமுறை கல்யாண வீட்டுக்காரர் வந்து சாப்பாடு ரெடி ஆகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் பாக்கியா சாப்பாட்டில் கவனம் செலுத்தாமல் இனியாவிற்கு ஃபோன் செய்ய வேண்டும் ரிசல்ட் என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று போனை தூக்கிக்கொண்டு டவர் இருக்கும் இடமாக பார்த்து சுற்றிக் கொண்டே இருக்கிறார்.
திரைப்படத்தில் வரும் வசனமான "காடு மலை மேடு பள்ளம்" என எல்லா இடத்தையும் சுற்றி திரிந்தது போல, பாக்யா இன்றைய எபிசொட்டில் மண்டபம் முழுக்க சுற்றி திரிந்து போதாது என்று ஊரிலும் தெருவில் மண்டபத்தின் உச்சியில் என பல இடங்களில் செல்போனை தூக்கிக்கொண்டு அலைகிறார். ஆனால் அந்த ஊரில் செல்போனுக்கு டவரே இல்லாமல் போய்விட்டது.
ஆனால் பாக்யாவின் போனுக்கு மட்டுமல்லாமல் அந்த மண்டபத்தில் அவரோடு வேலைக்கு போயிருந்த அந்த எட்டு பேருடைய செல்போனிலும் டவர் இல்லை என்பதுதான் பெரிய அதிர்ச்சி. குறிப்பிட்ட ஒரு கம்பெனிக்கு டவர் இல்லாமல் இருக்கலாம் சில ஊர்களில் டவர் கிடைக்காமல் இருக்குமானால் பாக்கியலட்சுமி சீரியலில் மட்டும் பாக்கியாவிற்கும் மட்டுமல்லாமல் பாக்யாவோடு இருக்கும் அனைவருக்கும் மொத்தமாக டவர் இல்லாமல் இன்றைய எபிசோட்டில் அல்லோலப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இனி பாக்யா எப்படி வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேசுவார்? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். அதே நேரத்தில் இனியாவுக்கு போன் பண்ணிய அவருடைய ஸ்கூல் டீச்சர் நீதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்திருக்க என்று உடனே அம்மா, அப்பாவை கூட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு வா என்றும் கூறியிருக்கிறார். இப்போது பாக்கியா எப்படி ஸ்கூலுக்கு போவார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இனியா மாலையோடு இருப்பது போன்றும் அருகில் ராதிகா இருப்பது போன்றும் ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் இனியாவின் அம்மாவாக கடைசி நேரத்தில் ராதிகா தான் மேடையில் நிற்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல இன்றைய எபிசோட்டில் செல்வியின் குரல் வழக்கமாக பேசும் அவருடைய வாய்ஸ் ஆக இல்லாமல் வேறு ஒரு வாய்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் இந்த சீரியலின் இன்றைய சொதப்பல்களில் ஒன்றாக இருக்கிறது. இதுவரைக்கும் கம்பம் மீனாவின் வாய்ஸில் கேட்டு வந்த செல்வி குரலுக்கு இன்று என்ன ஆச்சு என்று கேட்கத் தோன்றுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications