என் கதை முடிந்து விட்டதா? திரிஷா ஆவேசம்.. அவருடன் திருமணம், நான்கு குழந்தைகள்.. ஓபனாக வெளியிட்ட போஸ்ட்
சென்னை: நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறார், வெளிநாட்டில் குடியேறப் போகிறார், நடிப்பை முழுமையாக நிறுத்தப் போகிறார் போன்ற பல்வேறு வதந்திகள் ஒன்றுக்கு ஒன்று மேலாக வந்துகொண்டே இருந்தன. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் கவலையும் உருவானது.

திரிஷா இன்ஸ்ட்டா பதிவு
இந்த சூழ்நிலையில் தான் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவு வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு நேரடியாக பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவில், "என் கதை முடிந்து விட்டதா? நான் சினிமாவை விட்டுவிட்டேன், ஒரு பணக்காரரை திருமணம் செய்துகொண்டேன், நான்கு குழந்தைகளை வளர்த்து வருகிறேன்... இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா? இன்றைய கற்பனை கதைகளின் பட்டியல் முழுமையா?" என்ற கிண்டலாக, அதே நேரத்தில் கோபமான கருத்தை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் தான் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
ரசிகர்கள் கருத்து
திரிஷாவின் இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "இது தான் சரியான பதில்", "ஒரே போஸ்ட்டில் எல்லா வதந்திகளுக்கும் முடிவு வைத்துட்டாங்க" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், அடிக்கடி இப்படி பொய்யான தகவல்கள் பரவுவது குறித்து ரசிகர்கள் சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
திரிஷாவிற்கு திருமணம்
சமீப காலமாக திரிஷா பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டே வருகிறார். குறிப்பாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது. யாருடன் தொடர்பு, எப்போது திருமணம், எங்கு செட்டில் ஆகப் போகிறார் போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அதோடு சில பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட விதம், சமூக வலைதளங்களில் அவர் போடும் பதிவுகள் போன்றவையும் தேவையில்லாமல் விவாதமாக்கப்பட்டுள்ளன.
சர்ச்சைகள்
மேலும், விஜய் உடன் த்ரிஷா ஒரு திருமண நிகழ்ச்சிகள் கலந்து கொண்டது கூட அதிகமாக பேசப்பட்டது. இதனால் திரிஷா பற்றி நேர்மறை செய்திகளுக்குப் பதிலாக சர்ச்சை செய்திகள் அதிகமாக வெளிவருகின்றன என்றே கூறலாம். இருப்பினும், தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அவர், இந்த மாதிரியான வதந்திகளுக்கு நேரடியாக பதில் கொடுப்பது மிகவும் அரிது. ஆனால் இந்த முறை வந்த தகவல்கள் அளவுக்கு மீறியதால், ஒரே ஒரு பதிவில் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இதனால், திரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல் முற்றிலும் உண்மை அல்ல என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார் என்றும், தனது கேரியரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
விக்னேஷ் சிவன் போட்ட ஒரு போட்டோ... மீண்டும் டிரெண்டான திரிஷா! சர்ச்சைகளுக்கு பதிலடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications