இனி தமிழ்நாட்டுக்கு சங்கு தான்! ஐந்து வருஷம் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது.. சீரியல் நடிகை ரிஹானா ஆதங்கம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய கட்சி இவ்வளவு வலுவான நிலையைப் பெற்றிருப்பது அரசியல் ஆய்வாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சீரியல் நடிகை ரிஹானா ஆதங்கத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து
அரசியலில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் பரபரப்பு குறையாமல் தொடர்கிறது. பல சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விக்ரம் "வரலாறு படைத்துவிட்டாய் நண்பா" என பாராட்டியிருந்தார். நடிகர் நானி, விஜயின் வெற்றியை 'அண்டர்டாக் வெற்றி' என குறிப்பிட்டார். இதுபோல நடிகர் சிவகார்த்திகேயன் முதல் தேர்தலிலேயே இத்தகைய தாக்கத்தை உருவாக்கியதற்கு பாராட்டு தெரிவித்தார். ஜிவி பிரகாஷ் மற்றும் நடிகர் விஜய தேவர் கொண்டா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் ஆதரவு, விஜயின் அரசியல் பயணத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை
ஆனால், இதே நேரத்தில் எதிர்மறை கருத்துகளும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் நடித்த நடிகை வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தற்போதைய தேர்தல் நிலைமையைப் பார்த்து தமக்கு மிகுந்த வருத்தமும் பயமும் இருப்பதாக கூறி இருக்கிறார் மேலும், தமிழக மக்கள் எடுத்துள்ள முடிவு குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
சீரியல் நடிகை ரிஹானா வீடியோ
அதாவது ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் டெல்லி ஆட்களாக மாற்றி விட்டுட்டீங்க. அங்க என்ன நடக்குதுன்னு தெரியாம ஓட்டு போட்டு தொலைச்சிட்டீங்க. இன்றைய நாளிலிருந்து குறிச்சுக்கோங்க.. மணிப்பூரில் ஒரு பொம்பள புள்ளையா 100பேர் சேர்ந்து என்ன மாதிரி நாசம் பண்ணுனாங்க என்ன தெரியும்.. அதே போல இனி தமிழ்நாட்டில் பல சம்பவங்கள் நடக்க போகுது.
கவர்ச்சியை நம்பி ஓட்டு போட்டு டெல்லிகாரனை உள்ள கொண்டு வந்துட்டீங்க. இதனால பின் விளைவுகள் இனி மோசமாக இருக்க போகுது. நல்ல வேலை எனக்கு ஹிந்தி தெரியும் நான் பிழைச்சுக்குவேன் இனி எல்லோரும் ஹிந்தி கத்துக்கோங்க இல்லன்னா உங்க நிலைமை அவ்வளவு தான் என்று சொல்லி ரிஹானா கூறியிருப்பது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

ரசிகர்கள் கருத்து
இந்த வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் குவிந்துள்ளன. சிலர் அவரது கருத்தை ஆதரித்து பேசினாலும், பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். "தேர்தல் என்பது மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு, அதை மதிக்க வேண்டும்" என்று பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் "அவரது கருத்து தனிப்பட்ட பயம் மற்றும் உணர்ச்சி" என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சில முக்கிய தொகுதிகளில் தவெக முன்னிலை உறுதியாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளதால், அரசியல் வட்டாரங்கள் முழு கவனத்துடன் நிலையை கவனித்து வருகின்றன.
மொத்தத்தில், ஒரு பக்கம் விஜய்க்கு கிடைக்கும் பிரபலங்களின் ஆதரவு, மற்றொரு பக்கம் சிலரின் கடும் எதிர்ப்பு இந்த இரண்டும் சேர்ந்து தமிழக தேர்தல் சூழ்நிலையை இன்னும் அதிகமாக சூடுபிடிக்கச் செய்துள்ளது. தேர்தல் முடிவுகள் இறுதியாக அறிவிக்கப்படும் வரை, இந்த விவாதங்களும் பரபரப்பும் தொடர்ந்து நீடிக்கும் என்பது உறுதி.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications