மகாநதி சீரியலில் திடீரென மாற்றப்படும் பிரபலம்.. இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி.. இனிமே கதை அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம் ஏற்படப்போவதாக இந்த சீரியலில் இயக்குனர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மகாநதி சீரியலை இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகி காவேரி மற்றும் விஜய் இருவருடைய பெயரை வைத்து வீக்கா (vika) என்று சோசியல் மீடியாவில் சில ரசிகர்கள் ட்ரெண்டு செய்து கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் எந்த ப்ரோமோ வெளியானாலும் அதில் மகாநதிப் ப்ரோமோ எப்ப போடுவீங்க பாஸ் என்று கேட்பவர்கள் கமெண்ட்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

அதிலும் இந்த சீரியலில் சின்ன திருப்பங்களோ கதையில் மாற்றமோ வந்துவிட்டால் இந்த சீரியல்கள் ரசிகர்களுக்குள்ளே கருத்து மோதல்களும் ஏற்பட்டு வெடிக்கிறது. சோசியல் மீடியாவில் மகாநதி சீரியல் ரசிகர்கள் செய்யும் அலப்பறை அளவுக்கு அதிகமாக தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீரியலில் அதைப்படி காவிரி கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் காவிரியின் குடும்பத்தினர் விஜயை வெறுத்து ஒதுக்குவதால் விஜய் யாருக்கும் தெரியாமல் காவிரியை கவனித்துக் கொள்கிறார்.

காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை குடும்பத்தினரிடம் இன்னும் சொல்லாமல் தான் இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருடைய ரொமான்ஸ் பார்க்கும் ரசிகர்களை ஐயோ போதுமடா சாமி என்று சொல்லும் அளவிற்கு இருந்தாலும் சீரியல் ரசிகர்கள் என்னமோ இதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது என்று ஒவ்வொரு ப்ரோமோவிலும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம் வரப்போகிறது என்று சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் ரீப்ளேஸ்மென்ட்.. ரீப்ளேஸ்மென்ட்.. என்ன பண்றது? நான் அவாய்ட் பண்ண முடியாது! என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் இந்த சீரியலில் கதாநாயகி அல்லது கதாநாயகனோ மாற்றப்படுவார்களோ என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனாலும் இந்த சீரியலில் கண்மணி கேரக்டர் தான் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் ஒரு நடிகை நடித்திருந்தார். அவர் விலகியதும் அவருக்கு பதிலாக கண்மணி மனோகரன் அறிமுகமானார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
பிறகு கண்மணிக்கு பதிலாக நடிகை வைஷ்ணவி வந்தார். இப்போது அவரும் கர்ப்பமாக இருப்பதால் அவர் விலகப் போகிறார் என்று தெரிகிறது. அதற்காகத்தான் பிரவீன் இப்படி போஸ்ட் போட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இந்த சீரியலில் எந்த கேரக்டர் உங்களுக்கு பிடித்தது? எந்த கேரக்டரை பார்த்தாலே கடுப்பாகுது பாஸ்?












Click it and Unblock the Notifications