பாண்டியன் ஸ்டோரில் நடந்த அதிசயம்.. பாண்டியன் வீட்டிற்கு வந்த குமாரவேல் குடும்பம்.. விஷயம் இதுதானா? சூப்பர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது பாண்டியன் குடும்பமும் அவருடைய மனைவி கோமதியின் அண்ணன் குடும்பமும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இரண்டு குடும்பமும் சண்டை போட்டு பிரிந்திருக்கிறார்கள். இதனால் இவர்கள் எதற்காக செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் இந்த சீரியல் 500 எபிசோடு முடிவடைந்திருக்கும் நிலையில் அதை கொண்டாடி இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் தான் வந்தது. கடந்த வாரத்தில் அரசியின் திருமணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அரசிக்கு குமாரவேலின் சுயரூபம் தெரிந்ததும் அவரை பற்றி வீட்டில் போட்டுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரசியோடு எடுத்த புகைப்படங்களை எடிட் செய்து குமாரவேல் அரசியை மிரட்டி இருந்தார். ஆனால் அந்த புகைப்படங்கள் பற்றிய விஷயத்தை அரசி அவருடைய அண்ணி மீனா, ராஜியிடம் சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் சுகன்யாவின் சூழ்ச்சியால் அரசி குமாரவேலிடம் சிக்கி இருந்தார்.
அதிர்ச்சி கொடுத்த அரசி
ஆனால் குமாரவேல் அரசிக்கு தாலி கட்டாமல் ஒருநாள் முழுக்க வீட்டில் அடைத்து வைத்துவிட்டு அரசி தான் என்னை பார்க்க வந்தாள் என்று கல்யாணத்து அன்று வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக பிளான் போட்டிருந்தார். ஆனால் அதை தெரிந்து கொண்ட அரசு தன்னுடைய கழுத்தில் தானே தாலி கட்டிக் கொண்டு குமாரவேலுவுக்கும் எனக்கும் கல்யாணம் முடிந்து விட்டது என்று குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்தார்.
பழிவாங்கும் குமார்
பிறகு தன்னுடைய குடும்பத்தை பழிவாங்க நினைத்தால் குமார வேலுவை பழி வாங்குவதற்காக வீட்டிற்குள் பல தில்லாலங்கடி வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அரசியை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று குமாரவேல் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் கடைசியில் அது குமாருக்கு தான் ஒவ்வொரு முறையும் ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறது.
சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
இப்படியான நிலையில் தான் தற்போது இந்த சீரியலின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பாண்டியன் மற்றும் அவருடைய மச்சான் குடும்பங்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். இதை பார்த்ததும் இது என்ன அதிசயம்? இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்து விட்டதா? அப்போ சீரியலே முடிந்துவிடுமே என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வெற்றி
ஆனால் இந்த சீரியலில் 500 எபிசோடு முடிவடைந்ததும் இவர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அதனால் எல்லோரும் ஒரே வீட்டில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இனி தான் இந்த சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் வர இருக்கிறது என்று தெரிகிறது. ஏற்கனவே மயில் படிக்கவில்லை என்ற உண்மை சரவணனுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது.

பாண்டியன் எடுக்கும் முடிவு
சரவணன் மயிலை அவருடைய வீட்டிலேயே கொண்டு விட்டு வந்து இருக்கிறார். ஏற்கனவே அரசி பற்றிய விஷயம் தெரிந்ததும் பாண்டியன் ஆடி போய்விட்டார். பாண்டியனை பழி வாங்குவதற்காக பாண்டியன் முன்பு அரிசியை குமரவேல் அடித்திருக்கிறார். இந்த நிலையில் இனி தங்கமயில் பற்றிய உண்மைகளும் பாண்டியன் குடும்பத்திற்கு வரும் தெரிய வரும்போது பாண்டியன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications