வாலியின் யதார்த்தம்.. வைரமுத்து முதல்முதலாக இந்த படத்தில்தான் பாட்டு எழுதினாரா? பிரபலம் சீக்ரெட்
சென்னை: "நிழல்கள் பாடல்கள் ஹிட்டானதுமே, அதுதான் தன்னுடைய முதல் படம் என்று அந்த காலத்திலேயே சொல்ல ஆரம்பித்து விட்டார் வைரமுத்து. அப்போதே அவரது பொய் ஆரம்பமாகிவிட்டது. சூலம் படத்தில்தான் முதன்முதலில் பாடல் எழுதியது என்பது, வைரமுத்துவின் மனசாட்சிக்கும் தெரியும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
"வாலி, வைரமுத்து இருவரையும் ஒப்பிடுவதே தவறு.. கண்ணதாசனை வைரமுத்துவுடன் கம்பேர் பண்ணணும்னு நினைக்கக்கூட கூடாது.. வாலி மிகச்சிறந்த கவிஞர்.. எல்லா வகையிலும் கவிதைகளை எழுதக்கூடியவர்..

வாலி பாடல்கள்: பிரபுதேவா நடித்திருந்த இந்து படத்தில்கூட, "எப்படி எப்படி" பாடல் மிகப்பெரிய சர்ச்சையானது.. ஆனால், வாலி எதைப்பற்றியுமே கவலைப்படவில்லை.. இருக்கிறதைதானே எழுதினேன்? இல்லாததை ஒன்றும் எழுதலியே என்பதுபோல சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட்டார்..
ஆனால், இலக்கியத்தை பாடல்களில் புகுத்துவார் வைரமுத்து.. போறாளே பொன்னுதாயி என்ற பாடல் பாரதிராஜாவின் படத்துக்கு தேவைப்பட்டாலும்கூட, மக்களுக்கு புரியிற மாதிரி வைரமுத்து வரிகளை எழுதல.. வாலி எப்போதுமே எளிமையாக எழுதுவார்..
நல்ல கவிஞர்: வைரமுத்து நல்ல கவிஞர்தான்.. ஆனால், அவரது தனிப்பட்ட விஷயங்கள், ஆளுமைக்குரிய விஷயமாக தெரியவில்லை. அந்த காலத்தில், பொற்காசுகளை தந்தால் அரசவை கவிஞர்கள், ராஜாவை புகழ்ந்து பாடுவார்கள். அதுபோல, காசு தருபவர்களை புகழ்ந்து பேசுவார் வைரமுத்து., குருவிக்கரம்பை சண்முகம், முத்துலிங்கம், புலமைப்பித்தன், இதுபோன்ற கவிஞர்கள் யாராவது, பிறரை புகழ்ந்து பாடியிருக்கிறார்களா? பெரிய நபர்கள் என்றால், பணத்துக்காக புகழ்ந்து பேசிடுவார் வைரமுத்து.
ஆளுமை மிக்க கவிஞர்களிடம் எப்பவுமே ஒரு கர்வம் இருக்கும். ஆனால், வைரமுத்துவிடம் அப்படியொரு கர்வம் இல்லை, அவரது கர்வம் வேறு மாதிரியாக இருக்கிறது. சிறந்த கவிஞர் கண்ணதாசன் என்று இளையராஜா மேடையொன்றில் சொன்னார், உடனே சிறந்த இசையமைப்பாளர் எம்எஸ்வி என்று வைரமுத்து போட்டிக்காக சொல்வார்.
பைரவி படம்: என் அப்பா டைரக்டர் எம் பாஸ்கர், ரஜினிகாந்த்தை முதன்முதலில் பைரவி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்.. தன்னுடைய ஆஸ்கார் நிறுவனத்தில் "சூலம்" என்ற படத்தை எடுத்தபோது, வைரமுத்து சாரை, என் அப்பாவிடம் அறிமுகப்படுத்தினார் இளையராஜா. சமகாலத்தில் பாரதிராஜாவிடமும் அப்போது அவரை அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் சூலம் படத்திற்காக 2 பாட்டை எழுதியதுமே, என் அப்பா, அந்த பாடல்களை கேட்டுட்டு ஓகே செய்தார்.
ஒரே நாளில் வைரமுத்து எழுதிய 2 பாடல்களுமே ரிக்கார்டிங் செய்யப்பட்டது. அந்தவகையில், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முதலில் வைரமுத்து எழுதியது சூலம் என்ற எங்களுடைய படத்திற்காகத்தான்.. இதற்கு பிறகுதான் நிழல்கள் படத்துக்கு எழுதினார் வைரமுத்து.
நிழல்கள்: ஆனால், நிழல்கள் பாடல்கள் ஹிட்டானதுமே, அதுதான் தன்னுடைய முதல் படம் என்று அந்த காலத்திலேயே சொல்ல ஆரம்பித்து விட்டார் வைரமுத்து. அப்போதே அவரது பொய் ஆரம்பமாகிவிட்டது. இது இளையராஜா சாருக்கும் தெரியும்... சூலம் படத்தில்தான் முதன்முதலில் பாடல் எழுதியது என்பது, வைரமுத்துவின் மனசாட்சிக்கும் தெரியும்.
இளையராஜா வைரமுத்துவை ஒதுக்கியதுமே, பாடல்கள் இல்லாமல், சின்ன சின்ன இசையமைப்பாளர்களிடம் எழுதி கொண்டிருந்தார் வைரமுத்து.. அதற்கு பிறகு ஏஆர் ரஹ்மான் மிகச்சரியாக வைரமுத்துவை பயன்படுத்தினார்.
ஆனால், ஈகோ இல்லாத, ஆணவம் இல்லாத, அமைதியான, நல்ல மனிதரான ஏ.ஆர்.ரஹ்மான், எந்த காரணத்தினாலோ, இவரை பயன்படுத்தக்கூடாது என்று ஒதுக்கிவிட்டார். அப்பேர்ப்பட்ட ரஹ்மானே ஒதுக்கியிருக்கிறார்கள் என்றால், இவர்மீது ஏதோ ஒன்று தவறாக உள்ளது என்றுதானே அர்த்தம். ஆனால், வைரமுத்து, ரஹ்மான் இருவருமே அதற்கான காரணத்தை சொல்லவில்லை.
மறுப்பு எங்கே: பெண்கள் விஷயத்தில் அவரை சம்பந்தப்படுத்தி பேச நான் விரும்பவில்லை.. அது உண்மையா? பொய்யா தெரியாது. அப்படியே இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து மறுப்பு தரலாம்.. ஏன் அமைதியாக இருக்கிறார் எனறு தெரியவில்லை. பேட்டி எதையும் தரவேணாம். ட்விட்டரில் 2லைன் பதிவிடலாமே? அதுவரை பொதுமக்கள் பார்வையில் ஒரு சந்தேகம் இருக்கத்தானே செய்யும்?" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications