ஓடிடிக்கு வந்த பிறகு வாடி வதங்கும் வாழை! விமர்சனத்திற்கு தப்பாத மாரி செல்வராஜ்!
சென்னை: மாரி செல்வராஜின் திரைப்படங்கள் எப்போதும் சர்ச்சையை கிளப்பும் என்பது நாம் அறிந்ததே. அவரது சமீபத்திய படைப்பு 'வாழை'யும் இதற்கு விதிவிலக்கல்ல. ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான பின்னர், படம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன. தியேட்டரில் ஓடியபோது அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த படம், ஓடிடியில் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வாழை, கொட்டுக்காளி போன்ற படங்கள் நன்றாக இருப்பதாக ஓவராக பில்ட்அப் கொடுத்ததில் போகுமிடம் வெகுதூரமில்லை போன்ற நல்ல படங்கள் ரிலீஸ் ஆனது கூட தெரியாமல் போய்விட்டது என்றும் ஆதங்கங்கள் வெளிப்படுத்தப்படுகிறது.

- சுவாரசியம் குறைவு: பல ரசிகர்கள் படத்தில் சுவாரசியமான காட்சிகள் குறைவாக இருப்பதாக குறை கூறுகின்றனர்.
- ஆசிரியை-மாணவன் உறவு: கர்ச்சீப்பை மோந்து மோந்து பார்க்கும் வகையில், காட்சிகளை அமைத்து, ஆசிரியை-மாணவன் உறவு கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சரியான சித்தரிப்பு அல்ல என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
- கிளைமேக்ஸ்: படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், மனதில் ஒட்டவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். வரிசையாக உடல்களை கிடத்திப் போட்ட பிறகும், ஒவ்வொரு கேரக்டரும் மழையில் நனைந்து கிட்டத்தட்ட ஆவி போல வானத்தில் நிற்பதெல்லாம் காட்சியின் அழுத்தத்தை குறைத்து இது என்ன குறியீடு என யோசிக்கத்தான் வைப்பதாக நெட்டிசன்கள் குமுறுகிறார்கள்.
- வாழை சுமக்கும் காட்சிகள்: வாழை காய்களை சுமப்பது கஷ்டம் என்பதை திரும்பத் திரும்ப படம் காட்டுவதாகவும், எப்படியாவது, நீங்கள் அழ வேண்டும் என்று இயக்குநர்தான் செயற்கையாக, கெஞ்சி கேட்பதை போல இந்த காட்சியமைப்புகள் இருப்பதாகவும், இது சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர்.
- பிற படங்களுடன் ஒப்பிடுதல்: 'கல்லூரி' படத்தில் வரும் பேருந்து எரிப்பு காட்சி போலவோ, 'விசாரணை' படத்தில் இடம் பெற்ற போலீஸ் டார்ச்சர் விசாரணை காட்சி போலவோ, காதல் பட கிளைமேக்ஸ் போலவோ, இயல்பாகவே தோன்றும் நெஞ்சை பிணையும் காட்சியமைப்புகள், வாழையில் இல்லை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
பிரபலங்களின் பாராட்டு
இவ்வாறான விமர்சனங்கள் இருந்தாலும், திரையரங்குகளில் வெளியான போது பல பிரபலங்கள் படத்தை பாராட்டினர். குறிப்பாக, இயக்குநர் பாலா, மாரி செல்வராஜை கட்டிணைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
lubber pandhu ott: லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

தனித்துவமான கதை சொல்லும் பாணி
மாரி செல்வராஜின் படங்கள் எப்போதும் சமூக பிரச்சினைகளை முன்வைப்பதாகவும், யதார்த்தமான காட்சிகளை வழங்குவதாகவும் இருக்கும். 'வாழை' படமும் இதற்கு விதிவிலக்கல்ல. படம் ஒரு சிறுவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தாலும், அதன் வழியாக சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை, உழைக்கும் மக்களின் அவதி போன்ற பிரச்சினைகளை முன்வைக்கிறது.

'வாழை' படம் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், மாரி செல்வராஜின் தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் சமூக பிரச்சினைகள் மீதான அக்கறை என்பவை பாராட்டுக்குரியவை. ஆனால் விமர்சகர்கள் கருத்தை பார்த்து, மற்றுமொரு பரியேறும் பெருமாள் மாதிரி ஒரு படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்குதான் ஏமாற்றம் கிடைத்துள்ளது.'













Click it and Unblock the Notifications