வடிவேல் பாலாஜியாக மாறிய மகன் ஸ்ரீகாந்த்தை பாருங்க! என்ன கெட்டப் தெரியுமா? உருகும் கேபிஒய் பிரபலங்கள்
சென்னை: வடிவேல் பாலாஜியாகவே மாறிய அவருடைய மகனை பாருங்க! "வெற்றிக் கொடி கட்டு" படத்தில் வடிவேலு நீல நிறத்தில் சில்க் ஜிப்பா, லுங்கி அணிந்திருப்பார். அதே கெட்டப்பை வடிவேல் பாலாஜி போட்டு நிறைய பேரை சிரிக்க வைத்திருக்கிறார்.
மதுரையை சேர்ந்தவர் பாலாஜி. இவர் மிமிக்ரி கலைஞராக இருந்தார். மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் "கலக்க போவது யாரு" எனும் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

வடிவேல் கெட்டப்பை பயன்படுத்தி காமெடி செய்ததால் இவர் வடிவேல் பாலாஜி என அழைக்கப்பட்டார். "சிரிச்சா போச்சு", "அது இது எது" போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். அது போல் ஜோடி நம்பர் 1-இன் 8ஆவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார்.
குடும்பம்
இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீகாந்த் என்ற மகனும், ஸ்ரீதேவி என்ற மகளும் உள்ளனர். வடிவேல் பாலாஜி, தனது சிறப்பான நடிப்பு திறமையால் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.

இறப்பு
இதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 45.
என்ன படங்கள்
"கோலமாவு கோகிலா", "யாருடா மகேஷ்", "சுட்ட பழம் சுடாத பழம்" ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார். அவரது இறப்புக்கு பிறகு அவரது குழந்தைகளின் படிப்பை சிவகார்த்திகேயன் ஏற்றதாக சொல்லப்படுகிறது.

வறுமை
இந்த நிலையில் வறுமையில் இருந்த அவரது குடும்பத்திற்கும் பாலாஜியின் நண்பர்கள் உதவி செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் குக் வித் கோமாளி புகழுக்கு, வடிவேல் பாலாஜி மீது தனி பாசம். மாமா மாமா என வாய் நிறைய அழைப்பார். இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த் , வடிவேல் பாலாஜியின் கெட்டப் போட்டுள்ளார்.
வைரல் போட்டோ
"வெற்றிக் கொடி கட்டு" படத்தில் வடிவேல் அணிந்திருந்த நீல நிற லுங்கியை அணிந்திருந்தார். மேலும் தனது தாய், தங்கையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார. இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications