ரஜினி வாய்விட்டு கேட்டது இதுதான்! குஷ்பூவால் பிரச்சனை.. இதை விட மோசமா முடியாதுன்னு! வைரமுத்து ஓப்பன்
சென்னை: பாடலாசிரியர் வைரமுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் முதல் முறையாக வாய்விட்டு கேட்டது இதுதான் என்று சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். பல வருட ரகசியங்களை வைரமுத்து இப்போது பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஒரு திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்றால் அதில் பல விஷயங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் பாடல்கள். அத்தகைய பாடல்கள் சிறப்பாக வருவதற்கு பாடல் ஆசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என்று பலர் அதில் முக்கிய காரணங்களாக இருக்கின்றனர். ஆனால் பாடல் ஆசிரியர்கள் இயக்குனர்கள் தங்களிடம் கதையை சொன்னதும் அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பாடல்களை உருவாக்கி கொடுத்து விடுகிறார்கள். அது ஒரு சில நேரங்களில் வெற்றி அடைந்து விடுகிறது.

ஒரு சில நேரங்களில் சூழ்நிலைக்கு பொருந்தாமலும் போய்விடுகிறது. ஆனால் வெற்றி அடைந்த பாடல்கள் சிலவற்றில் அர்த்தங்களை ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு சில பாடல்கள் தத்துவ பாடல்களாக இருந்தாலும் ஒரு சில காதல் பாடல்களில் அதிகமாக இரட்டை அர்த்தங்கள் இருக்கும். அதிலும் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய பாடல்கள் பலவற்றில் இரட்டை அர்த்தங்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.
அதனாலேயே கூட சில youtube சேனல்களில் வைரமுத்துவின் பாடல்கள் குறித்து கிண்டல் செய்து வருவதையும் காணமுடிகிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வைரமுத்து தான் பாடல் எழுதிய அனுபவங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதில் அவர் பேசியதில் நான் அண்ணாமலை படத்தில் இடம்பிடித்த "கொண்டையில் தாழம்பூ" என்ற பாடலை எழுதியிருந்தேன்.
அதில் குஷ்பூ என்ற பெயர் வருவதை நான் எழுதியதை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற குழப்பத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரஜினி வந்தார். என்னவென்று அவர் கேட்டதும் நான் பாடல் வரிகளை அவரிடம் கொடுத்தேன். அவர் குஷ்பூ என்ற பெயரை பார்த்ததும் இது பாட்டில் வருமா? என்று கேட்டார்.
ஆமாம் என்று நான் சொன்னதும் அப்போ ரஜினி என்று பெயரும் வருமா என்று கேட்டுவிட்டார். இதை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. பிறகு அதற்கு அவர் கேட்டதால் தான் "வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி" என்ற வரிகளை சேர்த்தேன். நான் ரஜினிக்கு எத்தனையோ பாடல்களை எழுதி இருக்கிறேன். ஆனால் முதல் முதலாக ரஜினி என்னிடம் வாய்விட்டு கேட்டது இந்த ஒன்றுதான்.
அதனால் அவருக்கு ரஜினி என்று எழுதிக் கொடுத்தேன். அதுபோல குஷி திரைப்படத்தில் இடம் பிடித்த கட்டிப்பிடி கட்டிப்பிடி பாடல் என்னிடம் எழுத சொல்லி இருந்தார் தேவா. அந்த நேரத்தில் சூழ்நிலையை சொன்னதும் நான் இரண்டு வரிகளை அவருக்கு எழுதி கொடுத்தேன். இப்படி இருந்தால் ஓகேவா என்று கேட்க அவரும் அந்த வரியை பாடி பார்த்துவிட்டு இந்த வரியை அப்படியே பயன்படுத்தலாமா? என்று கேட்டார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன் பிறகு மேலும் சிலவற்றை தேவா தான் சேர்த்துக் கொண்டார். ஆனால் அந்தப் பாடலில் இதற்கு கீழே மோசமாக என்னால் எழுத முடியாது என்று தேவாவிடம் சொல்லிவிட்டேன். இல்லையென்றால் அவர் மேலும் சில வரிகளை என்னை எழுத சொல்லி இருப்பார் என்று அந்த அனுபவத்தையும் வைரமுத்து அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications