சூட்டிங் ஸ்பாட்டில் அசம்பாவிதம்.. கை, காலுக்கு வந்த பிரச்சனை, விஜய் டிவி ஹீரோயின் நெகிழ்ச்சி பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவி சுந்தர் சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நடந்த விபத்துக்கள் மற்றும் தன்னுடைய தன்னம்பிக்கையால் தான் மீண்டும் சீரியலில் நடித்து வருவது குறித்து எமோஷனலாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அவரை பலரும் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் ஒரு சிலருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் அதை பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகையை வைஷ்ணவி சுந்தர். இவர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு பொன்னி சீரியலில் கதாநாயகன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஆரம்பத்திலேயே அதிகமான விமர்சனங்களும் வைஷ்ணவிக்கு வந்தது. காரணம் இந்த சீரியலில் வைஷ்ணவி எப்போதும் அழுது கொண்டிருப்பது போன்ற நடித்துக் கொண்டு இருந்தார். அதனால் விமர்சனங்கள் வந்தது.
ஆனால் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே இவர்தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சமீபத்தில் தான் வைஷ்ணவிக்கு திருமணம் முடிவடைந்தது வைஷ்ணவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் பொன்னி சீரியலில் வைஷ்ணவிக்கு அண்ணனாக வெற்றி வசந்த் நடித்திருந்தார். அதுவும் ஒரு சில எபிசோடுகள் மட்டுமே இவர் வந்திருந்தார் அதற்கு பிறகு அந்த கேரக்டர் என்ன ஆனது என்றே காட்டப்படவில்லை.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் என்று அறிவிக்கப்பட்ட போது அது பெரிய அளவில் பேசப்பட்டது அதை தொடர்ந்து இருவருடைய திருமணமும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கடந்த ஒரு சில வாரங்களாக வைஷ்ணவி சுந்தர் சீரியலில் காணவில்லை அதற்கு பதிலாக கதை வேறு விதமாக பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது இதற்கு என்ன காரணம் என்ற கேள்விகள் எழுந்து வந்தது வைஷ்ணவி சீரியலில் இருந்து விலகி விட்டாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால் அவருக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவரால் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வமான வீடியோவை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஏற்கனவே சில சூட்டிங் நடைபெறும் போது தன்னுடைய கை தோள்பட்டை எலும்பு அடிபட்டது மற்றும் காலில் அடிபட்டது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு அந்த பதிவில் தொடர்ந்து சவால்களை எதிர்க்கும் ஒரு துறையில் நான் அங்கீகாரத்திற்காக போராடுவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் சாதிக்க எப்படி ஒரு இடத்தை உருவாக்க வேண்டும்? ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு பின்னடைவும் ஒவ்வொரு வெற்றியும் நான் கடந்து வந்த பெரிய பயணத்தின் பங்களிக்கின்றன.
திரையில் ஒவ்வொரு பிரகாசமான தருணத்திற்கும் பின்னால் எண்ணற்ற மணி நேர தயாரிப்பு ஆர்வம் மற்றும் தியாகம் உள்ளன. உறுதி மற்றும் எனக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வம் ஆகியவை தான் எனக்கு வரும் பிரச்சனைகளை உடைக்க உந்து சக்தியாக இருந்து வருகிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
பொன்னி சீரியலில் காணாமல் போய் இருந்த இந்த பொன்னியை இப்போதுதான் கதாநாயகன் கண்டுபிடித்து இருக்கிறார். பொன்னியின் அப்பா பொன்னியின் மாமனார் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் இப்போது வாபஸ் வாங்கி இருக்கிறார். ஆனாலும் பொன்னியின் மாமியார் பொன்னியின் அப்பா என்னுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தான் அவருடைய பொண்ணு என் வீட்டில் வாழ முடியும் என்று சவால் விடஃ அதற்கு பொன்னி அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையில்லை என்று கெத்தாக அங்கிருந்து கிளம்பி போகிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பொன்னியின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications