வள்ளியின் வேலன் சீரியல் நடிகர் சஹானா ஸ்ரீதர் மரணம்! அதிர்ச்சியில் சின்னத்திரை!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளியின் வேலன் சீரியலில் நடித்து வந்த ஸ்ரீதரன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். இவருக்கு வயது 62. இதனால் சின்னத்திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் புற்றுநோயால் ரவிக்குமார் உயிரிழந்தார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய சஹானா என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதர். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் வில்லன், அப்பா, குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். சென்னை தி.நகர் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். வள்ளியின் வேலன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கே.பாலசந்தர்
இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய சஹானா என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீதர். இவருடைய அசாத்திய நடிப்பின் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்தார்.
சஹானா சீரியல்
2003 ஆம் ஆண்டு வெளிவந்ததுதான் சஹானா சீரியல். அந்த காலத்திலேயே கே.பாலசந்தரின் படங்களுக்கு கிடைத்த வரவேற்பை போல் சீரியல்களுக்கும் கிடைத்தது. முதல் சீரியலான சஹானாவிலேயே ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ் ஆகிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதருக்கு கிடைத்தது.
பாலுமகேந்திரா இயக்கம்
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தில் ஸ்ரீதர் நடித்திருந்தார். அதுபோல் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அப்பா ரோல்கள் என்றாலே கூப்பிடுங்கள் ஸ்ரீதரை என சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றார்.
நிஜ அப்பா
வள்ளியின் வேலன் சீரியலிலும் ஹீரோயினின் தந்தையாக நடித்தார். அவரது நடிப்புக்கு பல ரசிகர்கள் உண்டு. மிகவும் யதார்த்தமாக இருக்கும். நிஜ அப்பாவை அப்படியே பிரதிபலித்தது. சன் டிவியில் ஒளிபரப்பான தாமரை சீரியலில் போலீஸாக நடித்திருந்தார். இந்த சீரியலில் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார். இந்த சீரியலில் நிரோஷா, நீலிமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கம்பம் மீனா இரங்கல்
ஸ்ரீதர் இறப்பு குறித்து பேசிய கம்பம் மீனா, "இப்போதுதான் ஷூட்டிங் முடிந்து வந்தேன். ஸ்ரீதர் சார் இறப்பு செய்தி கேட்டு அதிர்ந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வாறு கம்பம் மீனா தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் அவர்கள் ரவிக்குமார் புற்றுநோயால் உயிரிழந்தார். அவர் திரைப்படங்கள் மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications