வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இப்படியா நடக்கணும்? கையெடுத்து கும்பிட்டு கதறிய வனிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா நடிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார்.

பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா கதை எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் குறித்து இணையத்தில் வனிதா அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் 40 வயதிற்கு மேல் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்ட போது அவர்களுடைய வாழ்க்கையில் நிகழும் பல பிரச்சனைகளை சொல்வதாக கதை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Vanitha Vijayakumar vijay tv

அதோடு இந்த திரைப்படத்தை தான் எழுதி, இயக்கி, நடிப்பதற்கு காரணம் தன்னுடைய மகள்தான் தன்னுடைய மகள் கொடுத்த மோட்டிவேஷனல்தான் இந்த மாதிரி ஒரு படம் எடுத்தேன் என்றும் சொல்லி இருக்கிறார். இப்போதுள்ள மக்கள் எதார்த்தமான கதையையே விரும்புகிறார்கள். அதனால் எங்களுடைய திரைப்படத்தில் எதார்த்தமான கதைதான் இருக்கிறது என்றும் வனிதா கூறி இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான வனிதா நடிகர் விஜயுடன் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். பிறகு சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். அந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்தது. சொத்து பிரச்சனையால் குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் வனிதா சில வருடங்களாக சீரியல் மற்றும் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.

இப்போது தன்னுடைய மகள் தயாரிப்பில் தான் நடிக்கும் திரைப்படத்தின் பிரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் தமிழ் சினிமா இந்தியாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் பலமொழிகளில் இருந்து படங்களை வரவேற்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் இருந்தும் திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பை பெறுகின்றன. சில நேரங்களில் தமிழ்நாட்டில் உருவான படங்களுக்கும் இத்தகைய ஆதரவு கிடைக்காதது கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

Vanitha Vijayakumar vijay tv

வேறு நாட்டில் இருந்தும், வேறு பாஷையில் இருந்தும் தமிழ்நாட்டில் படம் எடுக்குறாங்க. உங்களுக்கு அந்த படம் பிடித்திருந்தால் அது பிச்சுக்கிட்டு ஓடுது. மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி இதில் எல்லோரும் தமிழ் நடிகர்கள் தான் நடிச்சிருக்காங்க. நாங்க எல்லோரும் இங்கு தான் நடிச்சு வரி கட்டிக்கிட்டு இருக்கோம்." வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று சொல்வதற்கு ரொம்ப பெருமையா இருக்கு. ஆனால் வந்தாரை மட்டும் வாழவைக்கும் தமிழ் நாடாக ஆக்கிடாதீங்க..." நான் கை கூப்பி கேட்கிறேன் ஒரு தடவை படத்தை தியேட்டர்ல போய் பாருங்க என்று உருக்கமாக வனிதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+