இறந்த பிறகுதான் சப்போர்ட் பண்ணுவீங்களா? என் பொண்ணு ஜோவிகா அங்கே இருந்தால் நிலைமையே வேற.. வனிதா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் எழுதி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் ப்ரோமோஷனில் வனிதா பேசிய பேட்டிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சமீபத்தில் அவிநாசியில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா என்ற பெண் குறித்து தன்னுடைய வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வனிதா தெரிவித்து இருக்கிறார்.

சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நடிகைகள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார்கள். அதனால் அவர்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வதும் உண்டு. அது போல தான் நடிகை வனிதா விஜயகுமாரும் இருக்கிறார். வனிதா ஆரம்பத்தில் கதாநாயகியாக சினிமாவில் நடித்திருந்தாலும் பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இப்போது 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய மகள் தயாரிப்பில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Vanitha Vijayakumar Ilaiyaraaja

மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் கதையை வனிதாவே எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. அளவுக்கு மிஞ்சிய ஆபாச காட்சிகள் இருக்கிறது என்று சிலர் கூறியிருந்தாலும் இதுவும் கணவன் மனைவி இடையில் வரும் ஊடல், காதல், காமம் என எல்லாவற்றையும் மையப்படுத்தி தான் இந்த கதை பயணிக்கிறது என்று சிலர் பாராட்டியும் வருகிறார்கள்.

அதே நேரத்தில் நேற்று இந்த படம் வெளியாகும் போது இசையமைப்பாளர் இளையராஜா இந்த திரைப்படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பிரமோ சூட்டில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தியது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தபோது வனிதா நான் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கும் போது அவரிடம் பெர்மிஷன் வாங்கி விட்டேன். அவர் இதை பயன்படுத்துவதற்கு சம்மதம் என்று சொல்லிவிட்டார் என்று சொல்லி இருந்தார்.

ஆனால் நேற்று இளையராஜா வழக்கு தொடர்ந்ததால் வனிதா கண்கலங்க செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். நான் இளையராஜா வீட்டின் பூஜையறையில் பூஜை கூட பண்ணி இருக்கிறேன். அவ்வளவு நம்பிக்கையாக இருந்தேன். அவருடைய வீட்டிற்கு நான் மருமகளாக சென்றிருக்க வேண்டும். ஆனால் சில விஷயங்களை இப்போது என்னால் சொல்ல முடியாது. நமக்கு ஒரு பிரச்சனை என்றால் கடவுளிடம் முறையிடுவோம். ஆனால் அந்த கடவுளே நம்மிடம் கோபப்பட்டால் என்ன பண்ணுவது என்று கண் கலங்க பேசி இருந்தார்

Vanitha Vijayakumar Ilaiyaraaja

இது ஒரு பக்கம் இருக்க வனிதா சமீபத்தில் தற்கொலை செய்த அவிநாசி ரிதன்யா குறித்தும் பேசி இருக்கிறார். ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட விஷயம் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படுகிறது. அந்த பெண் இறந்து போய்விட்டார் என்றதும் எல்லோரும் சோகமாக மியூசிக் போட்டு அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு பெண் தைரியமாக போராடுகிறார் என்றால் யாராவது இப்படி சப்போர்ட் கொடுக்கிறார்களா? என்றால் கேள்வி குறிதான்.

நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்ல மாட்டேன். எந்த பெண்ணாக இருந்தாலும் சரி எந்த சூழ்நிலையிலும் தைரியமாக இருக்க வேண்டும். ரிதன்யாவிற்கு கிடைத்த மாதிரி ஒரு மாமியார் மாமனார் ஜோவிகாவிற்க்கு கிடைத்து இருந்தால் என்ன ஆகிருப்பாங்க என்று எனக்குத் தான் தெரியும். பணம் கொடு என்று அவங்க கேட்டா அவங்களுக்கு சரியான பாடத்தை ஜோவிகா கொடுத்துடுவா. இதே போல தான் பொண்ணுங்க என்றால் தைரியமாக இருக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+