எங்க அப்பா வீட்டில் எல்லாரும் நடிக்கிறாங்க.. ரீல்ஸ் கூட பொய்.. அவங்களால்தான் குடும்பம் உடைந்தது, வனிதா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதை எழுதி, இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்து ப்ரோமோஷனில் பல விஷயங்களை வனிதா பேசியிருந்தார். அப்போது தன்னுடைய குடும்பத்தை பற்றியும் பேசி இருந்தார். அதில் தன்னுடைய குடும்பத்தில் எதனால் தனக்கு பிரச்சனை ஏற்பட்டது என்று சொல்லி இருந்தார். அப்போது தன்னுடைய குடும்பம் உடைந்ததற்கு காரணம் வெளியில் இருந்து வந்தவர்கள் தான் என்று வனிதா பேசியிருக்கிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். பிறகு திருமணம் செய்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் அவருடைய குடும்ப வாழ்க்கையில் அவருக்கு அடுத்தடுத்து ஏமாற்றமே கிடைத்தது. இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

Vanitha Vijayakumar vijay tv

சில வருடங்களுக்கு முன்புவரைக்கும் சீரியல் மற்றும் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு முன்பு ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வனிதா ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசியிருக்கிறார்.

வனிதா நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் தம்பதியின் மகள் வனிதாவிற்க்கு சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தோடு ஏற்பட்ட பிரச்சனை பலருக்கும் தெரிந்திருக்கும். சோசியல் மீடியா அந்த நேரத்தில் பெரிதாக இல்லை என்றாலும் செய்தி சேனல்களில் விஜயகுமார் மற்றும் வனிதா குடும்ப பிரச்சனை தான் பெரிதாக பேசப்பட்டது. வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கூட இது குறித்து பேசியிருந்தார்.

அப்போது காவல்துறையினர் வனிதாவை கைது செய்திருந்தனர். அதுவெல்லாம் அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் இப்போது தன்னுடைய குடும்பத்தை பற்றி வனிதா பேசும்போது எங்க குடும்பத்தில் எல்லாருமே நடிக்கிறாங்க, சில வருடங்களுக்கு நானும் என்னுடைய சகோதரிகளோடு எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. ஆனால் அது எடுக்கும் போது நான் சந்தோஷமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் எங்க குடும்பத்தில் நாங்கள் கல்யாணம் செய்வதற்கு முன்புவரைக்கும் எல்லோரும் நல்லபடியாக இருந்தோம். இப்போதும் சொல்கிறேன் என்னுடைய சகோதரரோ, சகோதரிகளோ யார் மீதும் தப்பு கிடையாது. ஆனால் வெளியில் இருந்து வந்த ஒரு சிலரால்தான் எங்கள் குடும்பம் உடைந்து சின்னா பின்னவாகி விட்டது. அவர்களுடைய பேச்சை கேட்டு தான் எங்கள் வீட்டில் இருப்பவர்களும் வேறு வழியில்லாமல் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்க அப்பா உட்பட என் கூடப்பிறந்தவர்களும் வெளியே இருந்து வந்தவர்களால் மனம் மாற்றம் செய்யப்படுகிறார்கள். ஆரம்பத்தில் என்னுடைய மூத்த அக்கா கவிதாவிற்கு கல்யாணம் முடிந்தது அப்போது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அக்காவிற்கு வாழ்க்கை சரியில்லை என்று விவாகரத்து முடிந்து விட்டது. அதற்குப் பிறகு அனிதா அக்காவின் கல்யாணம் முடிந்தது அப்போதும் எந்த பிரச்சனையும் இல்லை. அதற்கு பிறகு வந்த ஒரு சிலரால்தான் எங்களுடைய குடும்பத்தில் இப்போது வரைக்கும் பிரச்சனை இருக்கிறது.

நான் இனி அந்த குடும்பத்தோடு சேர முடியுமா? என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கும் பெரிதாக விருப்பமில்லை அவர்கள் விருப்பபடியே இருக்கட்டும். நான் என்னுடைய வேலையை கவனித்துக் கொள்கிறேன். அவர்கள் இப்ப கூட ரீல்ஸ் வீடியோக்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. அவர்களுக்குள் ஒற்றுமையோ பாசமோ முன்பு போல இப்போ இல்லை. சில நேரம் எல்லோரும் சேர்ந்து ரீல்ஸ் போடுவார்கள் ஒரு சில நேரங்களில் ஒருவர் இருவர் இல்லாமல் இருப்பார்கள், பிறகு சேர்ந்து கொள்வார்கள். இது எல்லா வீட்டில் நடப்பது தான். ஆனால் வீட்டிற்குள் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+