துரோகத்தை தாண்டி வந்துட்டேன்.. நீங்க அதை நிரூபிச்சிட்டா நான் சினிமாவை விட்டே போறேன்! வனிதா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் எழுதி இயக்கி நடித்த "மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்" திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்த்த வெற்றியை இப்படம் பெறாத நிலையில், வனிதா தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, திரைப்படம் குறித்து பரவி வரும் சில விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், நிரூபித்தால் சினிமாவை விட்டே விலகுவதாக சவால் விடுத்தார்.

வனிதாவின் முடிவு
விஜயகுமாரின் மகளான வனிதாவுக்கு தனி அறிமுகம் தேவையில்லை. சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். 30 வருடங்களுக்குப் பிறகு, தனது மகளின் தயாரிப்பில் கதாநாயகியாக அவர் அறிமுகமாகியுள்ளார். இயக்குனராக அறிமுகமாகியுள்ள வனிதாவுக்கு தற்போது பல பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன.
"மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்" திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் வனிதா தீவிரமாக ஈடுபட்டார். பல யூடியூப் சேனல்களில் திரைப்படம் பற்றி பேசினார். திட்டமிட்டபடி, ஜூலை 15ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், சிலர் இது "பிட்டு படம்" போல இருப்பதாக விமர்சித்தனர். மேலும், இப்படத்தின் காட்சிகள் பல படங்களில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.
லைவில் பேசிய வனிதா
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் வனிதா விளக்கம் அளித்தார். "நான் என்னுடைய படத்தை உங்களை நம்பி தான் எடுத்தேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதால், திரையரங்குகளில் பார்க்க தயங்குகிறார்கள். எனவே, மக்கள் எளிதாக பார்க்கும் வகையில் சமூக ஊடகத்தில் வெளியிட விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.
மேலும், ஓடிடியில் கொடுக்கவில்லை என்றும், அவர்கள் கொடுக்கும் தொகை கட்டுப்படி ஆகாததால் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதிகமான பாலோவர்ஸ் இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், மக்களை நம்பி ஒரு பெரிய முயற்சி எடுத்துள்ளதாகவும் கூறினார். சமூக ஊடகத்தில் மெம்பராகும் மக்கள் நாளை முதல் படத்தை பார்க்கலாம் என்றும் அறிவித்தார்.
திரைப்படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் ஒரிஜினல் என்றும், பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றும் வனிதா கூறினார். சிலர் தவறான விமர்சனங்களை அளித்து வருவதாகவும், அனைத்து விமர்சனங்களையும் பார்க்கவில்லை என்றாலும், சிலர் அனுப்பிய விமர்சனங்களை பார்த்ததாகவும் தெரிவித்தார். முழுமையாக பார்க்காமல் சிலர் விமர்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
துரோகங்கள்
"என் படத்தில் ஒரு காட்சியைக் காப்பி என்று நிரூபிக்க முடியுமா? நிரூபித்தால் திரைத்துறையை விட்டு விலகுகிறேன். எந்தப் படத்திலிருந்தும் நான் சுருட்டவில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண்பித்திருக்கிறேன். இளையராஜா சார் தொடர்ந்த வழக்கை லீகலாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவோ துரோகங்களை சந்தித்துவிட்டேன், இதையும் பார்த்துக் கொள்ளலாம். முன்பு போல இப்பொழுது நான் ஒரு பிரச்சனைக்காக உடைந்து போகவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
