வனிதாவுக்கு என்ன ஆச்சு? ஆசைப்பட்டது நடந்துடுச்சு, ஆனாலும் சோகமான போஸ்ட்.. காரணம் இதுதானா?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு ஆசைப்பட்ட விஷயம் தனக்கு நடந்து விட்டது என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் சோகமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வனிதா விஜயகுமார் நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா. இவர் அடிக்கடி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார். விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதில் மூத்த மனைவிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள். பிறகு முதல் மனைவியோடு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை மஞ்சுளாவின் மகள்
மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். பிறகு விஜயகுமாரின் இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகள் எல்லோருமே ஒரே வீட்டில் தான் வசித்து வந்தனர். ஆனால் உடல்நிலை குறைபாடு காரணமாக மஞ்சுளா காலமானார். அதற்கு பிறகு அனைவரும் ஒரே வீட்டில் இருக்கும்போது விஜயகுமார் குடும்பத்திற்கும் வனிதாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப பிரச்சனையானது.
வனிதா குடும்ப சூழ்நிலை
இதனால் வனிதா இப்போது குடும்பத்தை விட்டு விலகி தனியாக வசித்து வருகிறார். அவருடைய மகள்கள் மட்டும் வனிதாவுடன் இருக்கின்றனர். வனிதா அடிக்கடி காதல் திருமண சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பு ஏற்படுத்துகிறார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த வனிதா கதாநாயகியாக நடிகர் விஜயுடன் நடித்திருந்தார். அவருக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்த சமயத்தில் தான் அவர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
வனிதாவின் சோகமான போஸ்ட்
பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்திருக்கிறார். அதுபோல சின்னத்திரையிலும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் வனிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில்தான் வனிதா இன்று சோகமான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
வனிதாவின் பதிவு
அதை பார்த்ததும் இவருக்கு என்ன ஆச்சு என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த புகைப்படத்திற்கு, "ஒரு கிராமிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். நான்கு வருடங்களுக்கு முன்பு சினிமாவில் 40 படங்களுக்கு பிறகு இந்த வாய்ப்பை வழங்கிய திருமதி ராஜிக்கு நன்றி" என்று வனிதா அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் இவர் ஒரு கிராமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும்போது வனிதா அவருடைய அம்மா மஞ்சுளாவை போலவே இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications