அந்த நடிகர் பற்றிய கேள்வி.. வெளிப்படையாக பேசிய வரலட்சுமி.. இப்படி சொல்ல தைரியம் வேணுமே! சூப்பர்
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு வெளிப்படையாக பேசி இருக்கிறார். அப்போது நடிகர் பாலகிருஷ்ணா பற்றி அவரிடம் கேட்ட கேள்விக்கு டக்கு டக்கென்று பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பீர்களா? அல்லது வில்லியாக நடிப்பீர்களா? என்ற கேள்விக்கும் வரலட்சுமி யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்திருக்கிறார்.
சினிமா துறையில் ஒரு சில வாரிசுகளின் குழந்தைகள் தான் தங்களுடைய திறமையால் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தன்னுடைய தந்தையும், அம்மாவும் ஏற்கனவே சினிமா துறையில் இருந்திருந்தாலும் வரலட்சுமி "போடா போடி" திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தனக்கு எவ்வளவு பெரிய ரிஸ்க்கான கேரக்டர் கொடுத்தாலும் அதை நான் சர்வ சாதாரணமாக நடித்து விடுவேன் என்று அந்த கேரக்டராகவே வாழ்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். அதுபோல எந்த இடத்திலும் தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாகவே வரலட்சுமி பேசிவிடுகிறார். அதனால் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைப்பற்றி அவர் கண்டு கொள்ளாமல் கூலான வீடியோக்கள் அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தான் இவருக்கு நிக்கோலா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. வரலட்சுமிக்கு அவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கிறது. அதுபோல நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருக்கிறது. அவருக்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். வரலட்சுமியின் திருமண நேரத்தில் அதிகமான சர்ச்சை பரவி வந்தன. அதை எல்லாம் கண்டு கொள்ளாத வரலட்சுமி இவருடைய திருமணத்தை முடித்த பிறகு தன்னுடைய கணவரோடு அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சைமா விருது வழங்கும் விழாவில் வரலட்சுமி கலந்து கொண்டிருக்கிறார். இந்த விழாவில் "வீர சிம்ஹா ரெட்டி" என்ற திரைப்படத்தில் வரலட்சுமி நடித்ததற்காக நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அந்த விழாவிற்கு வந்த வரலட்சுமியிடம் பாலகிருஷ்ணா உடன் நடித்ததை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு வரலட்சுமி பாலகிருஷ்ணா உடன் நடிப்பது என்பது புது எனர்ஜி வருவதற்கு சமம். பொதுவாக நானே ஹைப்பில் நடிப்பேன். அவர் என்னைவிட பெரும் ஹைப்பில் நடிக்கிறார் என்று வரலட்சுமி கூறி இருக்கிறார். அதை தொடர்ந்து அவரிடம் நீங்கள் திருமணத்திற்கு பிறகு ஹீரோயினியா நடிப்பீங்களா? அல்லது வில்லியாக நடிப்பீங்களா? என்று கேட்டனர். அதற்கு வரலட்சுமி நடிகையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

வரலட்சுமி சமீபத்தில் தமிழை விட தெலுங்கில் தான் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் கூட அவர் ஒரு வில்லி போல தான் மிரட்டி இருப்பார். கடைசியில் தான் தன்னுடைய அண்ணன் பற்றிய உண்மை தெரிந்து மனம் திருந்தி இருப்பார். அந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு சமமான கெத்தான கேரக்டரில் வரலட்சுமி நடித்திருக்கிறார்.
வரலட்சுமி தான் நடிக்கும் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிப்பேன் என்று அவர் சொன்னதில்லை. கதை அம்சம் சரியாக இருந்தால் எந்த கேரக்டர் என்றாலும் என்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடைய கழுத்து எலும்பு உடைந்த வலியை கூட தாங்கிக் கொண்டு சூட்டிங் முடிந்து பிறகு தான் அது பற்றி பாலாவிடம் சொல்லிவிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். உண்மையான நடிகைக்கு இருக்கும் தகுதி வரலட்சுமிக்கு இருக்கும் நிலையில் அவர் மீண்டும் தமிழில் அதிக திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications