வரலட்சுமி சரத்குமாரின் பெரிய மனசு! குழந்தைகளுக்காக அவர் செய்த செயல்! கை கொடுத்த கணவர்.. குவியுது பாராட்டு
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில், ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்திற்குச் சென்று, அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் குறித்து அவர் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

வரலட்சுமியின் உருக்கமான பதிவு
நடிகை வரலட்சுமி சரத்குமார், HHH குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழித்த அனுபவத்தைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பதிவில் குறிப்பிட்டது:
"எங்கள் வருகையை ஏற்றுக் கொண்ட HHH குழந்தைகள் இல்லத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி," என்று கூறியுள்ளார். "ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறோம் என்று உறுதியளித்திருந்தோம். நாங்கள் அவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிட்டோம், விளையாடினோம், மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கினோம். அவர்களின் மகிழ்ச்சியைக் காண்பது எனக்கு ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த சிறிய உதவியைச் செய்வதன் மூலம் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார். "எப்பொழுதும் தேவைப்படுபவர்களுக்கு உதவ ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் எனது அம்மாவுக்கு ஒரு சிறப்பு நன்றி. லவ் யூ மம்மி" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். கடைசியாக, "கடவுள் இந்தக் குழந்தைகளையும், அவர்களைப் பராமரிப்பவர்களையும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் எப்போதும் ஆசீர்வதிக்கட்டும்" என தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
வரலட்சுமியின் சினிமா பயணம்
வரலட்சுமி சரத்குமார், 2012-ம் ஆண்டு, இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'தாரை தப்பட்டை', 'சண்டக்கோழி 2', 'சர்க்கார்', 'விக்ரம் வேதா' போன்ற படங்களில், தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். கதாநாயகி வேடங்களில் மட்டுமல்லாமல், எதிர்மறை கதாபாத்திரங்களிலும் அவர் முத்திரையைப் பதித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
வரலட்சுமி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல போட்டியாளர்களுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்திருந்தார்.
குடும்பம்
வரலட்சுமி, தனது 14 வருட நண்பரான, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு மகள் இருக்கிறார். நிக்கோலாய், வரலட்சுமியின் கனவுகளுக்குத் தடையாக இருக்க மாட்டேன் என்று உறுதி அளித்திருக்கிறார். வரலட்சுமியின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications