நான் விஜய் டிவியை விட்டு போகல.. 26 வருஷ பந்தம்.. அதற்கு காரணம் மீடியா மேஷன்ஸ்.. வெங்கடேஷ் பட் ஓப்பன்
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இப்போது டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராக மாறி இருக்கும் நிலையில் தான் எதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தேன் என்பது பற்றி நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி எடுக்கும் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சில மாதங்களாகவே இணையத்தில் அதிகமாக பேசப்படும் நபராக வெங்கடேஷ் பட் இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் செஃப்பாக பிரபலம் அடைந்திருந்தாலும் விஜய் டிவி மூலமாகத்தான் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் வரைக்கும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். விஜய் டிவியில் பல சமையல் நிகழ்ச்சிகளில் சிறப்பு சமையல் செய்து பலரையும் அசத்திய வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை அதிகமாக அடிக்கிறார் என்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருந்தாலும் அதற்கு இணையத்தில் உடனுக்குடன் பதில் கொடுத்து பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில மாதங்களுக்கு முன்பு தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று கூறியிருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அடைந்தது. இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர் ஏன் இவர் இப்படி திடீர் முடிவு எடுத்தார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் எதற்காக தான் நிகழ்ச்சியை விட்டு வெளியே போனேன் என்பது குறித்து எந்த இடத்திலும் வெங்கடேஷ் பட் பேசவில்லை. இந்த நிலையில் முதல் முறையாக சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.
ஆனால் அதற்கான முழு வீடியோ இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் அவர் பேசிய ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் நான் விஜய் டிவியில் இருந்து வெளியேறவில்லை. விஜய் டிவியில் உள்ள நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியே வந்திருக்கிறேன். நான் 1998 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் என்னுடைய பயணத்தை தொடங்கினேன்.
இப்போ சில மாதங்களுக்கு முன்புதான் அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இருந்து வெளியாகி இருக்கிறேன். எனக்கு விஜய் டிவியில் கிட்டத்தட்ட 26 வருட பந்தம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான். நான் 26 வருஷமா விஜய் டிவியில் மட்டுமே இருப்பதற்கு மெயின் காரணமாக மீடியா மெஷின்ஸ் நிறுவனம் தான் இருந்தது. ஆனால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் சிலர் சோசியல் மீடியாவில் பல்வேறு புரளிகளை பரப்புகிறார்கள்.
அதாவது சன் டிவி இவருக்கு நிறைய பணம் கொடுத்துட்டாங்க. விஜய் டிவிக்கும் இவர்களுக்கும் பயங்கர சண்டை அதனால இவர் வெளியே போயிட்டாரு என்று பல கமெண்ட்கள் குவிகிறது. ஆனால் நடந்த விஷயமே வேறு என்று வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார். ஆனால் என்ன நடந்தது என்பதை பற்றி அந்த வீடியோவில் முழுமையாக பேசவில்லை. அதுபோல வெங்கடேஷ் பட்டுடன் செஃப் தாமு எதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை என்பது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்த வீடியோவில் பதில் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர் என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வத்தோடு வந்தால் கடைசியில் சீரியல் போல தொடரும் என்று முடித்து விட்டாரே என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications