CWCயில் மணிமேகலைக்கு நடந்த கொடுமை.. அவங்களை செருப்பால அடிக்கணும்.. வெங்கடேஷ் பட் ஆதங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது குறித்து பேட்டி ஒன்றில் வெங்கடேஷ் பட் கோபமாக பேசி இருக்கிறார்.
ஒரு வாரம் ஆகவே சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பற்றி தான். அந்த நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை விலகியது குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து பிரியங்காவை ரவுண்டு கட்டி ரசிகர்கள் திட்டி வந்தனர். ஆனால் பிரியங்கா அது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருக்கிறார். ஒரு சில தினங்களாக அமைதியாக இருந்த விஜய் டிவி பிரபலங்கள் அதற்கு பிறகு பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அது பற்றி மணிமேகலை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார்.
இவர்கள் பிரச்சனையில் வெங்கடேஷ் பட் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த இருந்த நிலையில் மணிமேகலையோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல மணிமேகலை மற்றும் அவருடைய கணவர் உசேன் இருவரும் சேர்ந்து வெங்கடேஷ் பட் மற்றும் அவருடைய குடும்பத்தினை ஒரு பேட்டி எடுத்து இருந்தனர். அதுவும் பெரிய அளவில் வைரல் ஆனது.
மணிமேகலையை போலவே வெங்கடேஷ் பட் பிரியங்காவோடும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் யாருக்கு சப்போர்ட் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இப்போது வெளிப்படையாக தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருடைய சண்டையை நான் பார்க்கும்போது நம்ம வீட்டில் உள்ள இரண்டு பெண்கள் எப்படி சண்டை போடுவார்களோ அதுபோலத்தான் இவர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு பேருமே ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள். மணிமேகலை வீட்டை விட்டு வெளியே வந்து பல போராட்டங்களை தாண்டி இன்று சமூக வலைத்தளத்தில் இவ்வளவு பெரிய அழகாக மாறியிருக்கிறார். அதுபோல பிரியங்காவும் அவருடைய திறமையால் எல்லா நிகழ்ச்சியிலும் தனித்துவமாக நடத்தி காட்டி அவரும் பெயர் வாங்கி இருக்கிறார்.
அவர்கள் இருவருக்கும் சின்ன பிரச்சனை. ஆனால் இதை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் சிலர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சில தாத்தாக்கள் கூட ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல அது இது என்று பிரியங்காவை பற்றியும் மணிமேகலை பற்றியும் அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையை குறித்து அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியானவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.
சமூக வலைத்தளத்தில் இப்போது கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று கண்டமேனிக்கு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபமாக வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications