22 வருஷம் கழிச்சு அஜித்தை சந்தித்தபோது செய்த செயல்.. அதிர்ச்சியாக இருந்தது! வெங்கடேஷ் பட் ஓப்பன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் புதியதாக இணைந்திருக்கும் வெங்கடேஷ் பட் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் 22 வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்தபோது அஜித் செய்த செயல் தன்னை நெகிழ்ச்சி அடைய வைத்ததாக வெங்கடேஷ் பட் கூறியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்த வெங்கடேஷ் பட் அதற்கு முன்பு அந்த சேனலில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐந்தாவது சீசனிலிருந்து விலகி இருந்தார்.

அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தான் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்து இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்காண ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. வரும் மே 19ஆம் தேதி 12:30 மணிக்கு சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
காரணம் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பல பிரபலங்கள் சன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அதோடு சன் டிவி பிரபலங்கள் மற்றும் சினிமாவில் வில்லனாக இருக்கும் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொள்கிறார்கள். இதனால் இவர்கள் என்னதான் செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் எதனால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்று பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் தன்னை விஜய் டிவியில் பிரபலப்படுத்தியது மீடியா மிஷன்ஸ் நிறுவனம் தான். அதனால் அந்த நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகும் போது நானும் அவர்களோடு விலகி விட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதுபோல அதே பேட்டியில் நடிகர் அஜித்குமார் பற்றியும் பேசி இருக்கிறார். அதில் வெங்கடேஷ் பட் பேசுகையில் நடிகர் அஜித் ஏற்கனவே எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். அது போல அஜித்தின் மனைவி ஷாலினிக்கும் என்னை பிடிக்கும். ஆரம்பத்தில் எங்கள் குடும்ப நட்பு நன்றாக இருந்தது.
பிறகு நீண்ட நாட்களாக நாங்கள் சந்தித்துக் கொள்ளவில்லை.. 22 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அஜித்தை சந்தித்தேன். அவர் இந்த 22 வருடத்தில் கொஞ்சம் கூட மாறவே இல்லை. என்னை பார்த்தவுடன் கட்டி அணைத்தார். அஜித் அப்படி செய்தது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இந்த 22 வருடத்தில் அதிகமாக அவர் வளர்ந்து இருக்கிறார்.
ஆனாலும் என்னை பார்த்ததும் அவர் கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொதுவாக பெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் இப்படி இருப்பதில்லை. ஆனால் அஜித்தை பொருத்தவரை தொழில், புகழ் இதெல்லாம் தனி. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தனி என்று பிரித்து வைத்துள்ளார். அதனால் தான் அவர்களால் ஒரு நபருடன் சகஜமாக பழக முடிகிறது என்று அஜித் குறித்து வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications