தாமு ஏன் அதை அப்பவே சொல்லல.. ஆறு மாசமா வருத்தப்பட்டேன்.. மறக்க முடியுமா? வெங்கடேஷ் பட் எமோஷனல்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருக்க வெங்கடேஷ் பட் தன்னோடு நடுவராக இருந்த செஃப் தாமு குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது தாமு தன்னை விட சீனியர் ஆக இருந்தாலும் அவர் சில விஷயங்களை எனக்காக வெளியே சொல்லாமல் என்னை காப்பாற்றி இருக்கிறார் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் நடுவராக இருந்தார். அவரோடு துணையாக இருந்த தாமு ஐந்தாவது சீசனிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் வெங்கடேஷ் பட் ஐந்தாவது சீசனில் இருந்து விலகி விட்டார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டு நடுவராக இருக்கிறார்.

தனக்கு விஜய் டிவியோடு எந்த பிரச்சனயும் கிடையாது. ஆனால் தன்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய மீடியா மேஷன்ஸ் நிறுவனம் எங்கு இருக்கிறதோ அங்கு நானும் இருப்பேன். அவர்கள் விஜய் டிவியில் இருந்து விலகியதால் நானும் விலகி விட்டேன். அவர்கள் இப்போது சன் டிவியில் இருக்கிறார்கள் அதனால் நானும் சன் டிவியில் இருக்கிறேன் என்று ஏற்கனவே வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் விலகிய பிறகு தனக்கு ஆறு மாதங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் மிஸ் பண்ணியதை நினைத்து வருத்தமாக இருந்தது என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் வெங்கடேஷ் பட் குரேஷியோடு ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது குரேஷி, தாமு குறித்து கேட்க அதற்கு வெங்கடேஷ் பட் தாமுவை என்னால் மறக்க முடியாது. அவர் நான் காலேஜில் சேர்ந்த போது அந்த காலேஜில் அவர் பிரின்ஸ்பல் ஆக இருந்து வேற காலேஜுக்கு மாறி போனார்.

அதற்குப் பிறகு சில நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்திருக்கிறோம் ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுத்தது கிடையாது. சில இடங்களில் சிலருடைய சாப்பாடு எனக்கு பிடித்திருக்கும் போது அது குறித்து நான் பாராட்டும் போது கூட இந்த சாப்பாடு இப்படி இருந்திருக்கலாம் அல்லது இன்னும் கொஞ்சம் வெந்து இருக்கலாம் என்று ஏதாவது சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதுவும் சொல்ல மாட்டார்.
நான் பாராட்டினால் அவரும் பாராட்டுவார். அதுபோல அவருடைய முடிவில் நானும் தலையிடுவது கிடையாது. எங்கள் இருவருக்கும் ஒரு இணக்கம் இருந்ததால் தான் எங்களால் நான்கு சீசன்களாக தொடர முடிந்தது. அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எனக்கு பல மறக்க முடியாத நினைவுகள் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் வந்த பிறகும் கூட அந்த நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறேன்.
அப்போது சிலருடைய பர்பாமன்ஸை பார்த்து நான் இந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று கூட நினைத்திருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்த வெங்கடேஷ் பட் கடைசியாக குரேஷியிடம் எல்லாரும் என்ன மிஸ் பண்ணுறீங்கன்னு சொல்லுறீங்களே ஆனால் ஒருத்தர் கூட அந்த நிகழ்ச்சியில் சொல்லலையே என்று தன்னுடைய ஆதங்கத்தை கேள்வியாக கேட்டு இருக்கிறார். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் வெளியே வந்த பிறகு தன்னைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்ற வருத்தத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications