சிம்புவை வைத்து வடசென்னை 2? தனுஷ் கேட்ட 20 கோடி NOC? ஆரம்பம் முதல் இதுதாங்க நடந்தது! வெற்றிமாறன் விளக்கம்
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சினிமா வட்டாரத்தில் சிம்புவை வைத்து வெற்றி மாறன் வட சென்னை 2 படத்தை எடுத்து வருகிறார் என்றும் அதற்காக தனுஷ் என்ஓசி தர 20 கோடி வரை பணம் கேட்டதாகவும் தகவல் பரவி வந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று வெற்றிமாறன் இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் வெற்றிமாறனின் ஒவ்வொரு படமும் அவருக்கு பெயர் கொடுக்கும் அளவிற்கு அடுத்தடுத்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தனுஷை வைத்து ஐந்து படங்களை இயக்கி இருக்கிறார். தனுஷுக்கு வெற்றிமாறன் இயக்கிய ஒவ்வொரு படமும் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இன்று தனுஷ் ஹாலிவுட், கோலிவுட் என்று சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அதற்கு வெற்றி மாறனும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

வதந்திகளுக்கு பதிலடி
பொல்லாதவன் திரைப்படத்தில் தொடங்கி அவர்களுடைய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசும் போது வட சென்னை 2 தான் அடுத்து நான் நடிக்கப் போகிறது என்று சொல்லி இருந்தார். ஆனால் இயக்குனர் வெற்றி மாறன் சிம்புவை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் சிம்புவை வைத்து வட சென்னை 2 படத்தை பண்ணுகிறாரா என்று சர்ச்சைகள் கிளம்பி வந்தது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
சிம்புவின் அடுத்த படம்
அதில் வெற்றிமாறன் பேசுகையில் நான் வாடிவாசல் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த படம் ஆரம்பிப்பதற்கு இன்னும் நேரம் தேவைப்படுவதால் அதற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் தாணு சார் நீங்க சிம்புவுடன் படம் பண்ணுறீங்களா என்று கேட்டார். அதே போல சிம்பு ஏற்கனவே ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் அந்த படம் டிராப் ஆகி இருந்தது. அந்த நேரத்தில் தான் அந்த கால்ஷீட்டை சிம்பு வெற்றிமாறனுக்கு கொடுத்தார்.
தனுஷ் கொடுத்த பர்மிஷன்
எல்லா பிரச்சனைகளும் சரியான புள்ளியில் வந்து அமைய இந்த படத்தை இப்போது ஆரம்பித்துள்ளோம் என்று வெற்றிமாறன் கூறி இருக்கிறார். ஆனால் சிம்புவை வைத்து ஸ்டாண்ட் அலோன் படம் பண்ணலாமா? அல்லது வடசென்னை யூனிவர்சில் படம் பண்ணலாமா? என்று வடசென்னை உலகின் மொத்த உரிமையும் வைத்திருக்கிற தனுஷிடம் பேசினேன். அவர் உங்களுக்கு கிரியேட்டிவ்வாக எது சரி எனப்படுகிறதோ அதை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.
தனுஷ் பற்றி வெற்றி மாறன் பேட்டி
வடசென்னை உலகம் படத்தை மையப்படுத்திய படமாக எடுத்து வரும் படத்திற்கு தனுஷ் என் ஓ சி கொடுக்க பணம் கேட்டார் என்று சிலர் youtube சேனல்களில் தவறாக பேசி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. தாராளமாக வட சென்னை உலகில் படம் பண்ணுங்க என்றும், எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனக்கும் தனுஷுக்கும் உள்ள பழக்கம் பொல்லாதவன் படத்தில் இருந்து இல்லை பாலு மகேந்திரா இயக்கத்தில் அது "ஒரு கனாக்காலம்" படத்தில் உதவி இயக்குனராக நான் பணியாற்றும் போதிலிருந்து எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது.

சிம்பு சொன்ன விஷயம்
தனுஷ் என்னுடைய நல்லதுக்காக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு படத்துக்காக எங்களுடைய நட்பு எந்த வகையிலும் கெட்டுப் போகாது என அந்த பேட்டியில் வெற்றி மாறன் பேசி இருந்தார். அதோடு சிம்பு பற்றியும் அந்த பேட்டியில் வெற்றி மாறன் சொல்லி இருந்தார். அதாவது சில நாட்களுக்கு முன்பு சிம்பு வந்து என்னை சந்தித்தார் இப்படி எல்லாம் பேசுறாங்க, தனுஷுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு என்னால் கெட்டுப் போய் விடக்கூடாது நீங்க ஸ்டாண்ட் அலோன் படம் கொடுத்தால் கூட நான் அதில் நடிக்க ரெடி என்று சொன்னார். அவரிடமும் நடந்ததை சொல்லிவிட்டேன். சீக்கிரமாக இந்த படத்தை ஆரம்பித்து நல்லபடியாக முடித்து கொடுப்பேன் என்று வெற்றிமாறன் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications