நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் பற்றி விமர்சித்த விசித்திரா.. “அந்த” புகைப்படம் தான் ஹைலைட்
சென்னை:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த சில நாட்களுக்கு பிறகு விசித்ரா இன்று தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு பிக் பாஸை விமர்சித்து அதற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு எல்லா போட்டியாளர்களும் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் விசித்ரா எந்த youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுக்காமல் இருக்கும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் twitter பக்கங்களில் மட்டும் அடிக்கடி போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்று விசித்ரா வெளியிட்ட போஸ்ட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த போட்டியாளர் என்றால் அது விசித்ரா தான். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வயதில் அதிகமான போட்டியாளராக களம் இறங்கிய விசித்ரா 95 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து சாதனையை படைத்திருக்கிறார். இதுவரைக்கும் எந்த சீசனிலும் வயதில் முதிர்ந்த போட்டியாளர்கள் இத்தனை நாட்கள் இருந்தது இல்லை.
வயதில் மூத்தவர்களை தான் ஒரு சில வாரங்களிலேயே வெளியேற்றி விடுவார்கள். ஆனால் விசித்ரா மட்டும் தான் இத்தனை நாட்கள் இருந்திருக்கிறார். உள்ளே கண்டெண்டுக்கு பஞ்சம் இல்லாமல் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் விசித்ராவிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த விசித்ரா எல்லா போட்டியாளர்களை போல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் நன்றி தெரிவித்தும் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விசித்ரா தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது தன்னுடைய கணவர் மற்றும் மகன்களோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு அழகான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார்.
அதாவது "நிழலில் இருந்து நிஜத்திற்கு வந்தாச்சு மக்களே தேங்க்யூ சோ மச் எல்லோருடைய சப்போர்ட்டுக்கும், நன்றிக்கும்" என்று அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் தான் தற்போது இணையத்தில் அதிகமானவரால் பேசப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பது போதாது என்று வெளியேயும் அவர்களுக்காக போட்டியாளர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்போம்.
இந்த சீசன் கூட முடிவடைந்து ஒரு சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் இது பற்றிய பேச்சு இணையத்தில் இருக்க தான் செய்கிறது. இது ஒரு நிழல்தான் நிஜமல்ல என்பதை உள்ளிருக்கும் போட்டியாளர்களும் மறந்து விடுகிறார்கள், ரசிகர்களும் மறந்து விடுகிறார்கள். இப்போது அவர்களுக்கு விசித்ரா கொடுத்த கேப்ஷன் தெளிவை கொடுக்குமா என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு விசித்ரா அவரோடு அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த தினேஷ், அர்ச்சனா பற்றி என்ன சொல்லப் போகிறார் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அது குறித்து விசித்ரா நேரடியாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. என்றாலும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி மறைமுகமாக தாக்கி கேப்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications