சத்தியத்தை மீற முடியாமல் நடிக்க வந்தேன்! வேலாயுதம் படத்துக்கு ஒரு கோடி சம்பளம்.. விஜய் ஆண்டனி ஓபன்
சென்னை: இசையமைப்பாளர், நடிகர்கள், தயாரிப்பாளர் என்று பல திறமை கொண்ட விஜய் ஆண்டனி தான் எதற்காக சினிமாவில் நடிக்க வந்தேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதோடு தான் வேலாயுதம் படத்திற்காக முதல் முறை ஒரு கோடி சம்பளம் வாங்கினேன் என்றும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் பல திறமைகளை கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. அதேபோல விஜய் ஆண்டனி மனதில் பட்டதை எந்த இடத்திலும் வெளிப்படையாக பேசிவிடுவார். அவருடைய பேச்சுக்கள் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்கும். அவருடைய பேச்சு உத்வேகம் கொடுக்கும் வகையில் இருக்கும். அதுபோல அவருடைய ஸ்பெஷலான பாடல்களும் எப்போதுமே தனித்துவமாக இருக்கும்.

குத்து பாடல்
அதாவது எந்த பாடல் வரிகளும் புரியாத அளவிற்கு துள்ளல் இசையுடன் இருக்கும். அதிலும் நாக்க முக்க, ஆ...த்திச்சூடி, பன்னாரஸ் பட்டு கட்டி போன்ற பாடல் எல்லாம் இவருடைய ஆரம்ப காலத்தில் வந்த எவர்கிரீன் பாடல்கள். ஆனால் கதாநாயகனாக சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு சில வருடங்களாக இசையமைப்பதை விட்டு விட்டு நடிகராக மாறிவிட்டார்.
விஜய் ஆண்டனி ஹிட் பாடல்கள்
ஆனால் இப்போது தான் மீண்டும் இசையமைக்க போவதாக கூறி இருக்கிறார். அதோடு தன்னுடைய படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் நான் இனி இசை அமைக்க போகிறேன், எந்த சூழ்நிலையிலும் இசை அமைப்பதை நிறுத்த மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி இப்போது மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதுபோல ப்ரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மார்க்கன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியோடு அஜய் தர்ஷன், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி வாங்கிய சம்பளம்
இந்த நிலையில் விஜய் ஆண்டனி பேசிய பேட்டி ஒன்றில் தான் முதல் முறையாக ஒரு கோடி சம்பளம் வாங்கினது நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்திற்கு தான். அதற்கு முன்பு இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை. ஆனால் விஜய் படத்திற்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன் இனி நாம் அதிகமான சம்பளம் வாங்க வேண்டும் என்று அதேபோல எனக்கு வேலாயுதம் படத்தில் ஒரு கோடி சம்பளம் கிடைத்தது. நான் மியூசிக் டைரக்டராக வாங்கிய முதல் அதிகமான சம்பளம் அதுதான், அதற்குப் பிறகு வேட்டைக்காரன், வெடி, உத்தமபுத்திரன் போன்ற படங்கள் பண்ணும் போது நான் இண்டஸ்ட்ரியிலிருந்து வெளியே வந்து விட்டேன்.

விஜய் ஆண்டனிக்கு பாராட்டு
அதற்கு பிறகு இரண்டு வருஷம் கழித்து நடிக்க போறேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டேன். அந்த நேரத்தில் எல்லா படமும் ஹிட் ஆனது. கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல் தான் நான் நடிக்க வந்து விட்டேன் என்று விஜய் ஆண்டனி ஓபன் ஆக பேசியிருக்கிறார். பொதுவாக நடிகர்களாக இருந்தாலும் சரி, பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆக இருந்தாலும் சரி யாரும் சம்பள விஷயத்தை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் விஜய் ஆண்டனி தாள் வாங்கிய அதிக சம்பளத்தை பற்றி வெளியே வெளிப்படையாக பேசி இருப்பதை பலரும் வியந்து பேசி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications