மாறுவேஷத்தில் வந்த முக்தாரை விரட்டிய தவெக தொண்டர்? விஜய்யின் மதுரை மாநாட்டு குழாயில் தண்ணீர் வரலயா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தவெகவுக்கு எதிராக பேசிவரும் முக்தார் வெளியேறு. யூடியூபர் முக்தார் வெளியேறு'' என்று தவெக தொண்டர் ஒருவர் கத்தி கூச்சலிட, மாநாட்டிலிருந்த அனைத்து தவெக தொண்டர்களும் முக்தார் வெளியேறும்படி கூச்சலிட்டனர். இதையடுத்து, முக்தார் மாநாட்டுத் திடலில் அவசரம் அவசரமாக வெளியேறி சென்றார்.. அப்போதும் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்ற தவெக தொண்டர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களிடம், ''சார் முக்தாரை வெளியேற்றுங்கள்'' என்று ஆவேசமாக சொன்னதால், மாநாட்டு திடலில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தவெக தொண்டர்கள் சொல்வதென்ன?

நேற்றைய தினம் விஜய்யின் மதுரை மாநாடு தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான செய்தியாளர்களும், போட்டோகிராபர்களும், வீடியோக்களுடன் குவிந்திருந்தனர்.. அப்போது பிரபல பத்திரிகையாளரான முக்தார் அகமது அம்மாநாட்டுக்கு வந்திருந்தார்.. முகத்தில் மாஸ்க் மற்றும் கண்ணாடி அணிந்தபடி வந்த அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வெளியேற்றியதாக தெரிகிறது.

Television Vijay Mukthar

முக்தார் வெளியேற வேண்டும்

மேலும், முக்தார் வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர்.. பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரின் உதவியுடன் மாநாட்டு மேடையில் இருந்து, அவரை அழைத்து வந்து வெளியேற்றியதாகவும் தெரிகிறது.. மாநாடு தொடர்பாக திட்டமிட்டு அவதூறான செய்திகளை பரப்பியதாகவும், அதன் காரணமாகவே அவரை வெளியேற்றியதாக நிர்வாகிகள் தரப்பில் காரணம் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஒரு பிரபல சேனலுக்கு தவெக தொண்டர்கள் தந்திருந்த பேட்டியில், "நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கியதில் இருந்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் வீட்டில் இருந்து அரசியல் செய்வதாகவும், மக்களை சந்திக்கவில்லை என்று தொடர்ந்து விமர்சித்தார்.

மாறுவேடத்தில் மாநாட்டுக்கு முக்தார் வந்திருந்தார். நாங்கள் அவரை நீண்ட நேரமாக கண்காணித்து கொண்டேயிருந்தோம்.. இந்த மாநாட்டில் நெகட்டிவ்வாக உள்ள விஷயங்களை மட்டுமே புரமோட் செய்வதற்காக வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம்..

வெளியேற்றினோம்

எல்லா குழாய்களிலும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.. அவரும் ஒவ்வொரு குழாயாக செக் செய்து கொண்டேவந்தார்.. அப்போது ஒருவரை அழைத்து, குழாயின் மீது அழுத்து என்றார்.. அந்த நபரும் குழாயின் மேற்புறம் அழுத்தியதும் தண்ணீர் வரவில்லை.. உடனே குழாயில் தண்ணீர் வரவில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்..

அப்போதுதான் நாங்கள் அவரிடம் சென்று, குழாயை இப்படி திருப்பவேண்டும், மேலே அழுத்தினால் தண்ணீர் எப்படி வரும்? நீங்கள் முதலில் இங்கிருந்து வெளியேறுங்கள் என்று அதற்கு பிறகுதான் நாங்கள் குரல் எழுப்பி, அவரை மாநாட்டு முகப்பு வரை வெளியே விரட்டிச் சென்று விட்டுவிட்டு வந்தோம். எனவே யாரும் தவறான தகவலை பரப்ப வேண்டாம்.. உண்மையை சொன்னால் போதும்" என்று தெரிவித்தனர்.

சாப்பாடு கெட்டுப்போகலையா

இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? என்பார்கள்.. கட்சியின் மாநாடு நடக்கும்போது, மாறுவேடத்தில் மாஸ்க் அணிந்து, கூலிங்கிளாஸ் அணிந்து சென்று, அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்வதெல்லாம் தவறான விஷயம்..

லட்சக்கணக்கான மக்கள் வரக்கூடிய மாநாட்டில் இதுபோன்ற சின்ன சின்ன குறைகள் இருப்பதெல்லாம் சகஜம்.. அன்று அதிமுக நடத்திய மாநாட்டில் சாப்பாடு கெட்டுப்போகவில்லையா? அன்று முக்தார் எங்கே போயிருந்தார்? அந்த சாப்பாட்டை ஏன் புலனாய்வு செய்யவில்லை? இதுவரை எத்தனை கட்சிகளின் மாநாட்டுக்கு முக்தார் சென்று புலனாய்வு செய்திருப்பார்?

வாக்குவாதம் செய்தார்

தவெக தொண்டர்களிடம் முக்தார் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்ததாக சொல்கிறார்கள்.குழாயில் தண்ணீர் வரவில்லை என்பதை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைத்துள்ளார் முக்தார்.. பற்றாக்குறையாகி இருந்தாலும் குழாயில் தண்ணீர் வராமல் போயிருக்கலாம்..

மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த குழாயை இழுத்தால் தண்ணீர் வரும்.. ஆனால், அங்கிருந்த குழாயின் டிசைன் தெரியாமல், இழுப்பதற்கு பதிலாக குழாயை அழுத்தியிருக்கிறார் முக்தார்.. அதனால் தண்ணீர் வராமல் இருந்துள்ளது.. இதுதான் அங்கு நடந்துள்ளது.. எனவே ஒரு பத்திரிகையாளராக அனைத்தையும் பகுத்து பார்க்க வேண்டும்" என்று சேகுவேரா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+