விஜய் வீட்டிற்குள் நடந்த தகராறு.. மகனுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு! சங்கீதாவின் பேட்டி வரும்! பிரபலம் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் குறித்து கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அவரது குடும்ப வாழ்க்கையைச் சுற்றி உருவாகியுள்ள விவாகரத்து சர்ச்சை இப்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
விஜயின் மனைவி சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதுவே குடும்பத்தில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரு கல்யாண பங்க்ஷனில் கலந்து கொண்டார். இது சோசியல் மீடியாவில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் விஜய் பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியதும் வைரலாகி வருகிறது.

விஜய் மனைவி கொடுத்த விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் "விஜய் உண்மையாகவே விவாகரத்து கொடுக்கப்போகிறாரா?", "அல்லது இந்த பிரச்சனை சமரசமாக முடிவடையுமா?" என்ற கேள்விகள் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
இத்தனை சர்ச்சைகளுக்கிடையில் விஜய் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருப்பதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் பல்வேறு யூடியூப் சேனல்கள், சினிமா வட்டார பிரபலங்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது தயாரிப்பாளரான பாலாஜி பிரபு அளித்த ஒரு பேட்டி இணையத்தில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
வீட்டிலேயே பிரிந்து வாழ்ந்தார்கள்
அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய் - சங்கீதா உறவு குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: "விஜய் நிறைய அட்டகாசம் செய்திருக்கிறார். கடந்த ஆறு வருடங்களாக சங்கீதா அந்த வீட்டில் ஒரு அடிமை போலவே இருந்திருக்கிறார். அவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் கீழே விஜய் தங்கியிருப்பார். மேலே இருக்கும் ஃப்ளோரில் சங்கீதா தங்கியிருப்பார்.
இருவரும் நேரடியாக பேசுவதற்கே வாய்ப்பு இருக்காது. ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் இப்போது இருக்கும் மேனேஜர் மூலமாகத்தான் தகவல் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதிலிருந்தே அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நாம புரிந்துகொள்ளலாம்."
28 வருட வாழ்க்கை... ஆனாலும் பிரிவு
பாலாஜி பிரபு மேலும் பேசும்போது, விஜய் மற்றும் சங்கீதா கிட்டத்தட்ட 28 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்களுக்குள் பெரிய இடைவெளி உருவாகி விட்டதாகவும் அவர் கூறினார். "ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக சமைத்து சாப்பிடும் நிலைமை வந்துவிட்டது. சங்கீதாவுக்கு வெளியே போக கூட கார் கொடுக்கப்படாத நிலைமை இருந்திருக்கிறது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக சங்கீதா குறிப்பிட்டிருக்கும் அந்த நடிகைதான் என்று சொல்லப்படுகிறது. அந்த விஷயத்தை வைத்து வீட்டுக்குள் பல முறை பெரிய சண்டைகள் நடந்திருக்கின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
மகன் கேட்ட கேள்வி... உருவான தள்ளுமுள்ளு
இந்த குடும்ப பிரச்சனை ஒரு கட்டத்தில் குழந்தைகளையும் பாதித்ததாக பாலாஜி பிரபு கூறியுள்ளார். ஒரு முறை வீட்டில் பெரிய சண்டை நடந்தபோது, "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் கேள்வி கேட்டதாக அவர் கூறினார். அந்த நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் பெரிதாகி, விஜயும் அவரது மகனும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர் கோபத்தில் விஜய், "இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்க வேண்டாம்" என்று கூறியதாகவும், அதற்கு ஜேசன் "நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எனக்கு அதில் கவலை இல்லை" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார். தற்போது ஜேசன் தனியாக வசித்து வருவதாகவும், மகள் திவ்யா சாஷா லண்டனில் படித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகைக்காக குடும்பம் உடைந்தது
இந்த விவகாரத்தில் சங்கீதா எடுத்த முடிவை பற்றி பேசும்போது பாலாஜி பிரபு, "ஒரு நடிகைக்காக குடும்பமே உடைந்து போய்விட்டது. விஜய்யின் உண்மையான முகத்தை மக்களுக்கு தெரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சங்கீதா இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார். அவர் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதுதான் சங்கீதாவின் நோக்கம்" என்று கூறியுள்ளார்.
உதவியாளருடன் நடந்த சம்பவம்
மேலும் அவர் கூறிய ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது, "விஜய் ஒரு முறை தனது உதவியாளரை எட்டி உதைத்திருக்கிறார்" என்றும் பாலாஜி பிரபு கூறினார். "பொதுவாக பணக்காரர்கள் தங்களிடம் வேலை பார்க்கும் நபர்களை மிகவும் கவனமாக வைத்துக் கொள்வார்கள். ஏனெனில் அவர்களிடம் பல ரகசியங்கள் இருக்கும். ஆனால் விஜய் அப்படி யோசிப்பதே இல்லை" என்றும் அவர் கூறினார்.
விஜயின் முன்னாள் மேனேஜரான பி.டி. செல்வக்குமார் பற்றியும் பாலாஜி பிரபு பேசினார். "செல்வக்குமார் 1992ஆம் ஆண்டு முதல் விஜயுடன் இருக்கிறார். அவர் பல விஷயங்களை தெரிந்திருக்கிறார். அவர் வாயை திறந்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும். அவரே ஒரு முறை 'விஜய்யின் பல தவறுகளுக்கு நான் உடந்தையாக இருந்துவிட்டேன்; அதற்கான பரிகாரம் தேடுகிறேன்' என்று சொன்னார்" என்று பாலாஜி பிரபு கூறியுள்ளார்.
சங்கீதாவின் அடுத்த முடிவு
பாலாஜி பிரபுவின் பேச்சுப்படி, சங்கீதா இதோடு நின்றுவிடப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "சங்கீதா ஏற்கனவே ஒரு பெரிய டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்து முடித்துவிட்டார். ஆனால் அந்த பேட்டி வெளிவராமல் இருக்க விஜய் தரப்பு முயற்சி செய்து வருகிறது.
அந்த பேட்டியை ஒளிபரப்ப வேண்டாம் என்று சேனலிடம் சொல்லுங்கள்; என்ன வேண்டுமானாலும் செய்கிறோம் என்று கூறுகிறார்கள்" என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய் தனது சொத்துகளை வேறு பெயரில் மாற்றக்கூடாது என்பதற்காக சங்கீதா தரப்பு விரைவில் நீதிமன்றத்தில் 'ஸ்டே ஆர்டர்' பெற முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இணையத்தில் வெடித்த விவாதம்
பாலாஜி பிரபு கூறிய இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு தரப்பு ரசிகர்கள், "இவை எல்லாம் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள். உண்மை தெரியாமல் ஒருவரை குறை கூறுவது சரியல்ல" என்று கூறுகின்றனர்.
-
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா?












Click it and Unblock the Notifications