Vijay Sethupathi: விஜய் சேதுபதி இப்படிப்பட்டவரா? ஷூட்டிங் போன இடத்தில் செக்கை கொடுத்து நெகிழ வைத்துவிட்டாரே! கிரேட்
சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்தவர்களின் வலியை புரிந்துகொண்டு உதவி செய்யும் குணத்தால் தான் நடிகர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் 'மக்கள் செல்வன்' என்று பட்டத்தை வைத்தனர். ஒருவர் செல்லும் இடங்களில் அவர் செய்யும் உதவிகள் எப்போதும் வெளிவருவதில்லை. அப்படி வெளியே வராமல் இருந்து தற்போது வெளிவந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் பாராட்டு தெரிவிக்க தூண்டியுள்ளது.

படகு தொழிலாளிக்கு உதவி
நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பிற்காக சென்றபோது, படகுத் தொழிலாளிக்கு ரூ.50,000 கொடுத்து அவரை சொந்த படகுக்கு முதலாளியாக மாற்றியுள்ள சம்பவம் தான் அது. இதுகுறித்து அந்த படகு ஓட்டும் தொழிலாளி கூறியதாவது,
"மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் உட்பட பல முன்னணி நடிகர்கள் என் முன்னாடி இருக்கும் இந்த வீட்டுக்கு படப்பிடிப்புக்கு வந்திருக்காங்க. நான்தான் அவங்களை ஏரியை கடந்து செல்ல ஒரு படகுல கூட்டிட்டு போவேன். அவங்க எல்லாரும் திரும்பி போறப்போ எனக்கு ஏதாவது தருவேன்னு சொல்லுவாங்க. அதேபோல தந்தவங்களும் இருக்காங்க, கண்டுக்காமலே போனவங்களும் இருக்காங்க" என்றார்.
காசோலை கொடுத்த விஜய் சேதுபதி
ஒருமுறை நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு வந்திருந்தபோது, ஷூட்டிங் முடிந்து அவரை படகுல கூட்டிட்டு போயிட்டு இருக்கும்போது, இந்த படகு உங்களுடையதான்னு கேட்டாராம். வாடகைக்குன்னு சொன்னப்போ, இந்த சொந்த படகு வாங்க எவ்வளவு செலவாகும் என்று விஜய் சேதுபதி கேட்டிருக்கிறார். அதுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகும்னு சொன்னப்போ, படகுல வச்சே 50,000 ரூபாய்க்கு ஒரு செக் எழுதி கொடுத்துட்டு 'இனி சொந்தப் படகை ஓட்டுங்க'ன்னு சொன்னாரு என்று நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார்.
மக்கள் செல்வன் பின்னணி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு துபாயில் சாதாரண பணியாளராக பணிபுரிந்தவர். கஷ்டப்பட்டு ஜெயிச்சவங்களுக்கு தான் வாழ்க்கையின் வலி தெரியும் என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு நல்ல உதாரணம்.
நடிகராக வந்த பிறகும்கூட, அவர் பலருக்கும் உதவி செய்து வருகிறார். சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் அல்லது இலவசமாகவே கிடைக்கும் விதமாக ஒரு துணிக்கடையையும் தொடங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தவரின் வலி
என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும், அடுத்தவரின் வலியைப் புரிந்துகொண்டு செயல்பட கூடியவர் விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் கூறுவார்கள். சமீபத்தில் அவர் செய்த இந்த உதவியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். விஜய் சேதுபதியின் இந்த செயல், சினிமா பிரபலங்கள் பலரும் மக்களுக்கு உதவி செய்ய ஒரு தூண்டுகோலாக அமையும் என்று நம்பலாம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications