தொப்பை சீன், அப்படி காட்டாதனு சொன்னேன்.. ஆனால், அந்த தழும்பை வேணும்னே! விஜய் சேதுபதி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் இப்போது கதாநாயகனாக புகழின் உச்சத்தில் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மறக்க முடியாத கேரக்டர் குறித்து பேசி இருந்தார். அப்போது மாஸ்டர் திரைப்படத்தில் தன்னுடைய காட்சியை குறித்து பேசி இருந்தார். அதில் தான் தொப்பை வயிறு தெரிய ரோட்டில் நடந்து வரும் காட்சி குறித்து கலகலப்பாக பேசியிருந்தார்.

சினிமாவில் ஒரு சிலர்தான் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து பல்வேறு அவமானங்களையும், கஷ்டங்களையும் தாண்டி இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள். அதுபோல ஒருவர்தான் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சீரியல், சினிமா என்று சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். வெளிநாட்டில் கஷ்டமான வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தாலும் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு சினிமாவில் பல அவமானங்களை தாண்டி இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

Vijay Sethupathi vijay tv

விஜய் சேதுபதி பேட்டி

விரைவில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் தொடர்பாக பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி பேசி இருந்தார். அப்போது தன்னுடைய நடிப்பில் வெளிவந்த கேரக்டர்கள் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் மகாராஜா திரைப்படத்தின் அனுபவம் பற்றி பேசும்போது மகாராஜா படத்தில் லுக் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. ஆனால் அது ஒரு பொறுப்பான தந்தையின் கதாபாத்திரம். அதனால் அதனை அப்படித்தான் வடிவமைத்திருந்தோம்.

மாஸ்டர் படம் பவானி

அதுபோல கடைசி விவசாயி படத்தில் இடம் பிடித்த கேரக்டர் லுக் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நிறைய வாட்ச்களை கட்டிக்கொண்டு பட்டை அடித்துக் கொண்டு செல்லும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் மாஸ்டர் பவானி கேரக்டர் நடிக்கும்போது எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. அதாவது எந்த அளவிற்கு ஒருவன் உடம்பில் தழும்பு இருக்கிறதோ அந்த அளவிற்கு அவன் சண்டை போட்டு இருக்கிறான்னு சொல்லுவாங்க. இதை நான் லோகேஷிடம் சொன்னேன். அதனால் கண் பக்க தழும்புகளும், நெஞ்சில் ஒரு கட்டும் போட்டுக் கொண்டேன் அதுவும் எனக்கு ஒரு வித்தியாசமான கெட்டப்பாக இருந்தது.

விக்ரம் பட கெட்டப்

அதுபோல விக்ரம் படத்தில் ஒரு ஆக்சன் காட்சியில் நான் ஆட்டோவில் இருந்து வெளியே வருவது போன்று காட்சி இருந்தது. அதில் என்னுடைய தொப்பை அப்பட்டமாக தெரியும். உடனே நான் லோகேஷிடம் இப்படி வெளியே காட்டி விடாதே கலாய்க்க போறாங்கன்னு சொன்னேன். ஆனால் அவன் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி இருந்தார். கடைசியில் அந்த காட்சியை கட் பண்ணவில்லை. எல்லாரும் நன்றாக இருக்கிறது என்று சொல்லுறாங்க, அதனால அப்படியே வைத்துவிட்டேன் என்று சொல்லிவிட்டார்.

புது அனுபவம்

என்னுடைய மனசுக்குள்ள என்னை மக்கள் நல்லா கலாய்க்க போறாங்க நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் லோகேஷ் நினைத்தது போலவே நடந்தது. எல்லோரும் அந்த படத்தின் காட்சியை பாராட்டினாங்க. அது புதுவித அனுபவமாக இருந்தது என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+