பிக் பாஸை நான் பண்ணலன்னு சொன்னேன்! அந்த போட்டியாளருக்கு நடந்த விஷயம் வருத்தமா இருந்தது!- விஜய் சேதுபதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனக்கு வாய்ப்பு வந்தபோது தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என்று விஜய் சேதுபதி சொன்னதாக ஒரு பேட்டியில் அவரே பேசியிருக்கிறார். அதோடு எதற்காக தான் முடியாது என்று சொன்னேன் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பலமொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 8வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மற்ற சீசன் மொழிகளில் இந்த நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. தமிழில் இதுவரைக்கும் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட்: அதுபோல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கியிருந்தார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில நேரங்களில் கமல்ஹாசனுக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டபோது சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
கமல்ஹாசன் அறிக்கை: ஆனால் எட்டாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் விலகப் போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனால் யார் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்ற பெரிய கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அப்போது பலர் சொன்னது விஜய் சேதுபதி தான்.
சேனல் தரப்பினர் பேச்சுவார்த்தை: அதற்குப் பிறகு சேனல் தரப்பினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் விஜய் சேதுபதியே இந்த சீசனை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த அக்டோபர் ஆறாம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் 70 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி பேட்டி: இந்த நிலையில் விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தனக்கு தொகுத்து வழங்க வாய்ப்பு வந்த போது தான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை பற்றியும் அவர் பேசுகையில், இந்த நிகழ்ச்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ரவீந்தர் சார் வெளியே போனது கஷ்டம்: எப்படி ஒரு போட்டியாளர்களிடம் பேசி அவர்களை வழிநடத்துவது என்ற கேள்வி எனக்குள் இருந்தது. ஆனால் சேனல் தரப்பிலும், இயக்குனர்களும் சரி என்னிடம் பேசி புரிய வைத்தார்கள். பிறகு நான் நிகழ்ச்சியை தொடங்கிய பிறகு பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தது. முதல் வாரம் ரவீந்தர் சார் வெளியே போனது எனக்கு கஷ்டமாக இருந்தது.
ராணவ் விபத்து பற்றி பிக்பாஸிலிருந்து போன் பண்ணி சொன்ன வார்த்தை! வருத்தமா இருக்கு! அப்பா சந்துரு ஓபன்
வாக்குகளின் அடிப்படை: அவர் நல்ல போட்டியாளர் அவர் இந்த நிகழ்ச்சியில் கொஞ்ச நாட்கள் இருக்க வைப்பதற்கு எதுவும் வாய்ப்பில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு ப்ரொடெக்ஷன் டீமில் அது முடியாது வாக்குகளின் அடிப்படையில் தான் அனுப்பி இருக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பிறகு உள்ளே நடக்கும் போட்டிகளையும் நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்.
நிகழ்ச்சியை பற்றி புரிதல் இல்லாமல் என்னால் எதுவும் பேச முடியாது. அதற்காக தினமும் சில மணி நேரம் நிகழ்ச்சிகளை பார்த்து ப்ரோடக்ஷன் மற்றும் தயாரிப்பாளர் குழுவினரோடு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது தான் உள்ளே என்ன நடக்கிறது என்று நான் அப்டேட்டாக இருக்க முடியும். வார இறுதியில் என்னால் போட்டியாளர்கள் முன்பு பேசவும் முடியும்.
கலவரமான பிக் பாஸ் வீடு.. ராணவ்க்கு "அடி".. இன்று ஜாக்குலினுக்கு "கடி".. இப்படியும் பேசுவாங்களா?
போட்டியாளர்கள் நடவடிக்கை : அதுபோல உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் நடவடிக்கை ஒவ்வொரு வாரமும் மாறி கொண்டே இருக்கும். அதற்காக அவர்களை பற்றி புரிந்து தான் நான் அவர்களிடம் பேச முடியும். டெவில் டாஸ்க் நடக்கும் போது சிலர் வேறு மாதிரி நடந்து கொண்டார்கள், அதுபோல போனவாரத்தில் லேபர் மேனேஜர் டாஸ்க் நடைபெறும் போது இன்னொரு விதமாக விளையாடினார்கள்.
பிக் பாஸ் ராணவ் அப்பா யாரு தெரியுமா? இந்த அரசியல் பிரபலம் தான்.. மகன் பற்றி உருக்கமாக சொன்ன வார்த்தை
அடிபட்ட அதிர்ச்சியில் ராணவ் அம்மா.. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறாரா?
மிகப்பெரிய ஆப்பர்சூனிட்டி: இவர்களுடைய விளையாட்டை பார்க்கும்போது இது இவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆப்பர்சூனிட்டியாக தான் எனக்கு தெரிகிறது. நான் கூத்துப்பட்டறையில் இருக்கும்போது எனக்கு ஒரு வாரம் ட்ரைனிங் தந்தார்கள். அதுதான் என்னுடைய கூச்சத்தை போக்கியது. எனக்கு ரொம்பவும் கூச்சம் இருக்கும் அந்த கூச்சத்தை எனக்கு கூத்து பட்டறையில் போக்க வைத்தார்கள்.
போட்டியாளர்களுக்கு பெரிய ஆபர்: ஆனால் இங்கு பிக் பாஸுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு பெரிய ஆபர் கிடைத்து இருக்கிறது. வருமானத்திற்கு வருமானமும் கிடைக்கிறது, சாப்பாடும் கிடைக்கிறது. அதே நேரத்தில் அவர்களுக்கு நல்ல அனுபவமும் கிடைக்கிறது என்று அந்த பேட்டியில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications