விஜய், திரிஷா கல்யாண மாப்பிள்ளைக்கு கொடுத்த அட்வைஸ்.. கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சை தான். கடந்த சில மாதங்களாகவே அவரது குடும்ப வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக அவரது மனைவி சங்கீதா விஜய் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த மனுவில் கூறப்பட்டதாக சொல்லப்படும் சில குற்றச்சாட்டுகள் கூட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்த நிலையில் நேற்று அவர் ஒரு கல்யாண பங்க்ஷனில் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக கலந்து கொண்டு மணமக்களுக்கு கொடுத்த அட்வைஸை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார்.

விஜயின் குடும்ப விவகாரம் இன்னும் ரசிகர்களிடையே பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் நேரத்தில், சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழா இந்த விவாதத்தை மேலும் பெரிதாக்கி விட்டது. பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குடும்பத்தில் நடந்த திருமண விழாவே இதற்கு காரணம். அவருடைய மகன் சுரேஷ் அகோரம் திருமணம் சென்னை நகரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் தமிழ் சினிமாவின் பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
விஜய் திரிஷா கலந்து கொண்ட கல்யாணம்
அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். ஆனால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், அவருடன் நடிகை திரிஷா கூடவே வந்திருந்தார் என்பதே. இந்த நிகழ்வு நடந்தது தான் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியது. காரணம், விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் இந்த இருவரும் ஒன்றாக விழாவுக்கு வந்தது தான்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஜோடிகளில் விஜய் - திரிஷா ஜோடி முக்கியமானது. அவர்கள் சேர்ந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் லியோ போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவை. இந்த படங்களில் அவர்கள் நடித்த காட்சிகளிலும் பாடல்களிலும் இருவருக்கும் இடையே இருந்த ஒத்துழைப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக பலரும் கூறியுள்ளனர்.
விஜய் திரிஷா சர்ச்சை
ஆனால் இந்த நட்பு பற்றி ஆரம்பத்திலிருந்தே பல கிசுகிசுக்களும் வெளிவந்தன. அதற்கு விஜய்யோ திரிஷாவோ ஒருபோதும் வெளிப்படையாக பதில் சொல்லவில்லை. மாறாக இருவரும் அமைதியாகவே இருந்து வந்தனர். ஒரு காலத்தில் இந்த கிசுகிசு அதிகமாக பேசப்பட்டதால் அவர்கள் சேர்ந்து நடிப்பதை கூட சில ஆண்டுகள் தவிர்த்ததாக கூறப்பட்டது. பின்னர் லியோ படம் மூலமாகவே அவர்கள் மீண்டும் ஒன்றாக திரையில் தோன்றினர்.
விஜய் மனைவி விவாகரத்து வழக்கு
இப்படியான பின்னணியில் தான் இந்த திருமண விழா சம்பவம் நடந்தது. விழாவிற்கு விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக வந்ததோடு, இருவரும் ஒரே நிறத் தோற்றத்தில் இருக்கும் உடைகளை அணிந்து வந்திருந்தனர். இதுவே சமூக வலைத்தளங்களில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜய் உடைய மனைவி விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என்று விவாகரத்து மனுவில் தெரிவித்து இரக்கும் இந்த நேரத்தில் "இப்போது இப்படி வர வேண்டிய அவசியமா?" என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
"மனைவி விவாகரத்து மனு கொடுத்திருக்கும் சூழலில், இது சரியான செயல் இல்லை" என்று சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர். சிலர் இன்னும் கடுமையாக, "விஜய்யை நம்பி ஆதரித்த ரசிகர்களுக்கே இது பெரிய அதிர்ச்சி" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த திருமண மேடையில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு சம்பவமும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகிறது.

விஜய் கொடுத்த அட்வைஸ்
அதாவது, மணமக்களை வாழ்த்தும்போது விஜய் மணமகனை பார்த்து, "மனைவியை கடைசிவரை கவலைப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியானதும் ரசிகர்களிடையே பலவிதமான எதிர்வினைகள் வந்தன. "தன் மனைவியுடன் பிரச்சனை நடக்கும்போது இப்படிப் பேசுவது எப்படி?" என்று சிலர் கேள்வி எழுப்பினர். "காதல் மனைவி சங்கீதாவை கவலைப்பட வைத்துவிட்டு இப்படி சொல்லுகிறாரா?" என்று சிலர் விமர்சனமும் செய்தனர்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்தவர்களில் ஒருவர் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் இந்த தகவலை பகிர்ந்து வைத்து "அடேங்கப்பா" என்று சுருக்கமாக கிண்டலாக பதிவு செய்திருந்தார். அந்த பதிவு கூட தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த திருமண விழா சம்பவம் அந்த விவாதத்தை இன்னும் அதிகப்படுத்தி விட்டது. சிலர் இதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டாலும், பலர் இது தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கியதாகவே கூறி வருகின்றனர்.
இதற்கெல்லாம் நடுவில் விஜய்யோ, சங்கீதாவோ, திரிஷாவோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் உண்மை என்ன என்பது குறித்து ரசிகர்களும் பொதுமக்களும் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம் - இந்த சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இன்னும் சில நாட்கள் பேசப்படும் ஒரு பெரிய விவாதமாக மாறிவிட்டது.
அடேங்கப்பா... pic.twitter.com/pM4QSivclW
— Blue Sattai Maran (@tamiltalkies) March 5, 2026
-
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா? -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!












Click it and Unblock the Notifications