விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 4 நிகழ்ச்சிகள்..இதுதான் காரணமா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் நான்கு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து முடிவடைய போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் ரியாலிட்டி ஷோக்கள் முடிவடைந்து அடுத்த சீசன் தொடங்குவது வழக்கமானது தான்.
ஆனாலும் இந்த முறை அடுத்தடுத்து நான்கு நிகழ்ச்சிகள் முடிவடையும் நிலையில் ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டும் புதிதாக தொடங்க இருக்கிறது.

சின்னத்திரையில் ஆரம்ப காலகட்டத்தில் ஒரே ஒரு டிவி சேனல் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பிடித்து இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த டிவி சேனலுக்கு போட்டி ஆக பல சேனல்கள் முளைத்து விட்டன அதில் ஒன்றுதான் விஜய் டிவி.
விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு என்றே ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை இந்த டிவி சேனலில் அதிகமான ரியாலிட்டி ஷோ மற்றும் புதுப்புது சீரியல்கள் என அடுத்தடுத்த அப்டேட் வந்து கொண்டே இருப்பதும் காரணம் தான். ஒரு சில குறிப்பிட்ட தொகுப்பாளர்கள் மட்டுமே இந்த டிவி சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. குறிப்பாக இளைஞர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது. பல நேரங்களில் இந்த டிவி சேனல்களை குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவதும் வழக்கம்தான். இருந்தாலும் தற்போது இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நான்கு ரியாலிட்டி ஷோக்கள் ஒரே நேரத்தில் முடிவடைகிறது.
அதில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார் மியூசிக் மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் தான். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிகளுக்கு பதிலாக புதியதாக ரெடி ஸ்டடி போ என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பாக்கியலட்சுமி சீரியல் எழிலாக நடிக்கும் நடிகர் விஜே விஷால் மற்றும் ரக்ஷன் தான்.

இந்த நிலையில் நீங்கள் இந்த சேனலில் எந்த நிகழ்ச்சியை அதிகமாக மிஸ் பண்ணுகிறீர்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவடைந்ததும் அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை எந்த மாதிரி கேட்டகிரியில் போட்டியாளர்கள் எடுக்கப் போகிறார்கள் என்றும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
கடந்த முறை மக்களின் பிரதிநிதி என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இரண்டு பேருமே சமூக வலைதளத்தில் டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் தான். ஆனால் இந்த முறை எப்படி போட்டியாளர்கள் தேர்வு செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications