பாக்கியலட்சுமி: பாக்யாவிடம் போலீஸ் சொன்ன விஷயம்.. இனியா கொடுத்த அதிர்ச்சி.. ஆவேசத்தில் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் நிதிஷை பாக்கியா கண் முன்பு போலீஸ் அரெஸ்ட் செய்கின்றனர். இதனால் பாக்கியா சுதாகருக்கு ஃபோன் பண்ணி பேசுகிறார். அதே நேரத்தில் சுதாகர் குடும்பத்தின் ரகசியத்தை பற்றி இனியா கோபியிடம் சொல்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா நிதிஷ் தள்ளிவிட்டதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியாவுக்கு போன் செய்து நாம போட்டிக்காக போயிருந்த ஹோட்டலில் இருந்து வர சொல்லி இருந்தாங்க என்று சொல்கிறார். அதற்கு இனியா உன்மேல நம்பிக்கை வச்சு போயிட்டு வாம்மா என்று தைரியம் கொடுக்கிறார். அடுத்ததாக இனியா கோபிக்கு போன் பண்ணி உங்களை பாக்கணும் போல இருக்கு ஆபீஸ்க்கு வர முடியுமா என்று கேட்கிறார்.

உடனே கோபியும் ஆபீசுக்கு போய் நிற்கிறார். பிறகு இனியாவும் கோபியும் டீ ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நான் உங்களை வருத்தப்பட வைக்கிற மாதிரியான விஷயத்தை தான் சொல்லப்போறேன் டாடி என்று சொல்கிறார். அதை கேட்ட உடனே கோபி ஏன் என்னாச்சு என்று பதட்டமாக கேட்க அதற்கு இனியா நிதிஷ் என்கிட்ட கடுமையாக நடந்து கிட்டார், என்னை பிடிச்சு கீழே தள்ளி விட்டுட்டாரு என்று சொன்னதும் கோபி ரொம்பவே கோபப்படுகிறார்.
பிறகு அந்த வீட்டில் இருக்கிறவங்க எல்லாருமே நடிச்சிட்டு தான் இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து பாக்கியா போட்டியில் கலந்து கொள்வதற்காக ரெஸ்டாரண்டுக்கு போய் நிற்கிறார், அந்த ஹோட்டலில் நிதிஷ் போதை பொருள் பயன்படுத்தி இருப்பாதால் அங்கு ரைடு வந்த போலீஸிடம் மாட்டி விடுகிறார். அதை பார்த்து போலீஸ் நித்திஷை கைது செய்து வண்டியில் ஏற்ற பாக்யா பதறி போய் போலீஸ் இடம் நிதிஷ் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று கெஞ்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் போலீஸ் பாக்கியா சொல்வதை கேட்காமல் நிதிஷை கூட்டிக்கொண்டு போகின்றனர். உடனே பாக்கியா சுதாகருக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு சுதாகர் அப்படியெல்லாம் இருக்காது தப்பா அரஸ்ட் பண்ணி இருப்பாங்க என்று சொல்கிறார். பிறகு தன்னுடைய மனைவியை கூப்பிட்டு அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications