Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமி: நிதிஷை கொலை செய்த இனியா? மன்னிப்பு கேட்ட சுதாகர்.. கோபி கொடுத்த கம்ப்ளைன்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியல், பாக்கியாவின் குடும்பப் பிரச்சனைகளுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடில், கோபிக்கு நேர்ந்த அடிதடி, இனியாவின் அதிரடி நடவடிக்கை மற்றும் சுதாகரின் அதிர்ச்சியூட்டும் 'டீல்' ஆகியவை பரபரப்பை ஏற்படுத்தின.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், நேற்று சுதாகருடன் ஏற்பட்ட அடிதடி காரணமாகக் கோபியின் முகம் மாறியிருப்பதைக் கண்ட ஈஸ்வரி, "என்னாச்சு கோபி, குடிச்சிருக்கியா?" என்று கேட்கிறார். அதெல்லாம் ஒன்றும் இல்லை, ஒரு சண்டை என்று கோபி கூற, என்ன சண்டை என்று மூவரும் (ஈஸ்வரி, பாக்கியா, இனியா) அதிர்ச்சி அடைகின்றனர். சுதாகர் மிரட்டிய விஷயத்தைக் கோபி விவரிக்க, அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். உடனே இனியா கோபப்பட்டுப் பேச, கோபி அவளைத் தடுத்து, "எதுவுமே பேசாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். நான் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ணி FIR பதிவு பண்ணிட்டாங்க. இதுக்கு மேலே எல்லாமே அவங்க பார்த்துப்பாங்க" என்று கூறி அமைதிப்படுத்துகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

சுதாகரின் தந்திரம்

அறைக்குச் சென்ற இனியா டென்ஷனாக இருக்கிறாள். முதலில் சுதாகருக்கு ஃபோன் போட, அது சுவிட்ச் ஆஃப் ஆக இருக்கிறது. பிறகு நிதீஷுக்கு போன் போட, முதலில் ரிங் சென்று நிதீஷ் போனை எடுக்காமல் இருக்கிறான். இரண்டாவது முறை முயற்சிக்கும்போது, சுதாகர் வந்து போனை அட்டென்ட் செய்கிறார். "நான் நிதீஷ் அப்பா பேசுறேன்" என்று சொல்ல, இனியா, "எதுக்காக எங்க அப்பாவ மிரட்டினீர்கள்? அடிச்சீங்க?" என்று ஆவேசமாகக் கேட்கிறார். சுதாகர், "குழந்தை அதுக்குள்ள வந்து வீட்டில் கம்ப்ளைன்ட் பண்ணிடுச்சா?" என்று அலட்சியமாகப் பேச, இனியா "பார்த்து பேசுங்கள்" என்று மிரட்டுகிறார். மீண்டும் சுதாகர் ஓவராகப் பேச, இனியா கோபத்தில் போனை வைத்துவிட்டு, "இதுக்கு மேல் சும்மா இருக்கக் கூடாது" என்று முடிவெடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்க வருகிறார்.

இனியாவின் கோபம்

போலீஸ் ஸ்டேஷன் வந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே, சுதாகர் இனியாவுக்கு போன் செய்கிறார். "நீ நிதீஷ் மேல கொடுத்திருக்கிற கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கிடு. அவன் பழைய மாதிரி ஆயிடுவான்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் உங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடறேன். நீங்க கல்யாணத்துக்குப் பண்ண செலவு வட்டியோட திருப்பி கொடுத்துவிடுகிறேன். இது மட்டும் இல்லாமல், உங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட்டையும் கொடுத்துடறேன். பணம் கூட கொடுக்கிறேன்" என்று அதிர்ச்சியூட்டும் ஒரு 'டீலை' முன்வைக்கிறார்.

பழிவாங்கும் நடவடிக்கை

சுதாகரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு இனியா குழம்பிப் போகிறார். "உங்களை என்னால் நம்ப முடியாது" என்று இனியா சொல்ல, சுதாகர் விடாமல், "நான் உங்க அம்மாவோட முதல் ரெஸ்டாரன்ட்ல தான் இருக்கேன். இடத்தை கூட உனக்குச் சொல்லிட்டேன். நீ நேரில் வந்தால் நான் உனக்கு பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன்" என்று சொல்ல, இனியா கம்ப்ளைன்ட் கொடுக்காமல் அந்த ரெஸ்டாரண்டுக்கு விரைந்து வருகிறார்.

நிதீஷின் அதிர்ச்சி

ரெஸ்டாரண்டுக்குள் வந்து பார்க்கும்போது, நிதீஷ் அங்கே இருப்பதைப் பார்த்து இனியா அதிர்ச்சி அடைகிறார். "உங்க அப்பா எங்கே?" என்று கேட்க, நிதீஷுக்கு முதலில் யார் வந்ததுன்னே தெரியாமல் இருக்கிறான். பிறகு, இனியா "என் வைஃப்" (My wife) என்று சொல்ல, இனியா, "நான் உன் பொண்டாட்டி எல்லாம் கிடையாது" என்று திட்டுகிறார். உடனே, "உங்க அப்பா தானே நீங்க வர சொன்னார் இங்கே?" என்று இனியா கேட்க, நிதீஷ், "எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல. இப்ப இங்க, நாளைக்கு என்ன நடக்குதுன்னு எனக்கு என்ன தெரியும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறான்.

வார்த்தைப் போர்

கோபமடைந்த இனியா, "எங்க அப்பா ஒரு ஃபிராடு, அயோக்கியன். அவன் என்ன வேணா பண்ணுவான்" என்று நிதீஷின் தந்தையை வசைபாடுகிறார். அதைக் கேட்ட நிதீஷ், "அவரைப் பற்றி உன்கிட்ட சொல்றேன் பாரு. அவர் பார்த்து வச்ச பொண்ணு தானே நீயும்? அப்படித்தானே இருப்ப?" என்று பதிலுக்குப் பேசுகிறான். இனியாவுக்குக் கோபம் அதிகரிக்கிறது, "எனக்கு அமைவதெல்லாம் பாரு. கேடுகட்ட அப்பா, உன்னை மாதிரி ஒரு பொண்டாட்டி. அடுத்தது என்ன? உனக்கும் ஆகாஷுக்கும் கல்யாணம் தானே? வீட்டில் சொல்லி பண்ணிட்டீங்களா, இல்லை ஓடிப்போய் பண்ணியிருக்கிறீர்களா?" என்று கேட்கிறார்.

அதிர்ச்சியில் இனியா

தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிதிஷ் ஒரு கட்டத்தில் இனியாவின் கைகளை பிடித்து இழுக்க அதனால் கோபமான இனியா அவரை பிடித்து தள்ளி விடுகிறார். அப்போது நிதிஷ் அங்கிருக்கும் ஒரு தூணில் விழுந்து விடுகிறார். விழுந்த வேகத்தில் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார். இனியா பக்கத்தில் சென்று பார்த்துவிட்டு தண்ணீர் தெளித்து பார்க்கிறார். அப்போதும் எழவில்லை என்பதால் இனியா அதிர்ச்சியாக இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+