பாக்கியலட்சுமி: சிசிடிவியில் பாக்கியா குடும்பத்தினர் கண்ட காட்சி.. கோபி சொன்ன ரகசியம்! இனியா எடுக்கும் முடிவு!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடு, கோபியின் தியாகம், குடும்பத்தினரின் தவிப்பு மற்றும் சிசிடிவி ஆதாரம் குறித்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பானது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.
இனியாவின் முடிவு
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், கோபி பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலில் இருப்பதால், "அப்பா தான் பழியை ஏத்துக்கிட்டார்களா? நம்ம இதுக்கப்புறம் இங்க இருக்கறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை," என்று இனியா முடிவெடுக்கிறார். இதைக்கேட்ட பாக்கியாவும், "நானும் இதுதான் நினைச்சேன், நம்ம வீட்டுக்கு போயிடலாம்," என்று சொல்ல, இனியா "இப்பவே போகலாம்," என்று துடிக்கிறார். அதற்கு பாக்கியா, "வேண்டாம், இந்த நைட்ல போக வேணாம். காலையில கிளம்பலாம்," என்று கூறுகிறார். "பாட்டி எப்படி இருக்காங்க?" என்று பாக்கியா கேட்க, "செல்வி ஆன்ட்டியும் ஆகாஷ்சும் பார்த்துக்கறாங்க," என்று இனியா சொல்கிறார்.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்
மறுநாள் காலையில், செல்வி ஈஸ்வரிக்கு காபி கொடுக்க, அவர் வேண்டாம் என சொல்லுகிறார். ஆகாஷ் வெளியே நின்று கொண்டிருக்க, செல்வி வீட்டுக்குப் போகச் சொல்ல, அந்த நேரம் பார்த்து பாக்கியா பசங்களுடன் வந்து இறங்குகிறார். உள்ளே சென்று ஈஸ்வரியிடம் பேசுகின்றனர். ஈஸ்வரி அழுதுகொண்டே இருக்க, இனியாவும் அழுகிறாள். பிறகு பாக்கியா, "நானும், எழில், செழியன் மூவரும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவோம்," என்று சொல்ல, ஈஸ்வரியும் இனியாவும் "நானும் வரேன்," என்று கூறுகின்றனர். ஆனால், "நீங்கள் வர வேண்டாம், அங்கே என்ன பிரச்சனை நடக்குதுன்னு தெரியாது, நாங்க பார்த்துக்கிறோம்," என்று சொல்லிவிட்டு, மூவரும் கோபியைப் பார்க்க வருகின்றனர்.
போலீஸ் ஸ்டேஷனில் கோபி
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் கோபி இருக்கும் நிலைமையைப் பார்த்து மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழில், "உங்களை அடித்தார்களா அப்பா?" என்று கேட்க, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நீங்க அமைதியா இருங்கடா," என்று சொல்ல, எழில் போலீஸ் இடம் சண்டை போடுகிறார். "கொலைகார குடும்பத்துக்கு இவ்வளவு வாயா?" என்று கேட்க, பிறகு கோபி அமைதியாக இருக்கச் சொல்கிறார்.
கோபியின் தியாகம்
"இப்போதைக்குக் கோபப்படாதீங்க. நான் சொல்றது மட்டும் கேளுங்க. நம்ம வீட்டுக்கு போலீஸ் இன்ஸ்பெக்ஷன் வருவாங்க. அப்போ நான் தான் கொலை பண்ணதாகவோ, நிதிஷ் சாவறதுக்கு ஒரு நாள் முன்னாடியே நீங்க வெளியே போயிட்டதாகவும் தான் நான் சொல்லி இருக்கேன். அதே மாதிரி நீங்களும் சொல்லிடுங்க. அப்போதான் நம்ம குழந்தையை காப்பாற்ற முடியும்," என்று நினைத்து "கவலைப்படாத பாக்கியா, நீ நம்ம குழந்தைகளைப் பார்த்துக்கொள்," என்று கோபி சொல்ல, அனைவரும் கண்கலங்குகின்றனர். பிறகு அனைவரும் வீட்டுக்கு வந்துவிடுகின்றனர்.
சிசிடிவி ஆதாரம்
வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரியிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் "என்னால் அப்படி சொல்ல முடியாது," என்று கண்கலங்கி அழுகிறார். எழில் மற்றும் செழியன், "எங்களாலயும் முடியாதுதான், ஆனால் இனியாவை காப்பாத்த நம்மளுக்கு வேற வழி இல்லை பாட்டி. எப்படியாவது உண்மையை கண்டுபிடித்து நம் அப்பாவை வெளியே எடுத்துட்டு வந்திடலாம்," என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே போலீஸ் வந்துவிடுகின்றனர். இனியா போலீஸ் கேள்விக்குப் பயந்து பேசுவதைப் பார்த்து, ஈஸ்வரி "ஆமா, நாங்க பல நடக்கிறதுக்கு முன்னாடி நாள் தான் போனோம்," என்று கோபி சொல்லிய விஷயங்களைச் சொல்லி விடுகிறார். போலீசார், "இனிமேல் எங்கேயும் வெளியே போகக்கூடாது. நாங்க எப்பவும் விசாரணைக்கு கூப்பிட்டாலும் வந்துவிடும்," என்று சொல்லிச் செல்கின்றனர்.
கொஞ்ச நேரத்தில் எழில் சிசிடிவி புட்டேஜ் எடுத்துக்கொண்டு வர, அடுத்து என்ன நடக்கிறது? என்ன பேசுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சிசிடிவி ஆதாரம் கோபிக்கு நியாயம் வாங்கித் தருமா? அல்லது மேலும் சிக்கலை அதிகரிக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications