இறங்கி இப்படி அடிக்குதே விஜய் டிவி.. பக்தி சூப்பர் சிங்கர் செட்டில் சம்பவம்.. உடைத்து பேசும் பிரபலம்
சென்னை: மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.. மற்றொருபுறம் விஜய் டிவி நடத்தும் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் ஒன்றும் பேசுபொருளாகி வருகிறது. இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சர் டாக்டர் காந்தராஜ், மூத்த பத்திரிகையாளர் ஜீவ சகாப்தன் போன்றோர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து உள்ளனர். என்ன நடந்தது விஜய் டிவியில்?
விஜய் டிவி பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பாடகி தேவகோட்டை அபிராமி, "அங்கே இடி முழங்குது கருப்பசாமி" என்ற பாடலை பாடியிருந்தார். அப்போது அரங்கமே அவரை கைதட்டி உற்சாகப்படுத்தியது.

புஷ்பவனம் குப்புசாமி அபிராமியை பாராட்டுவதற்காக மேடைக்கு வந்தபோது, அவருக்கு சாமி அருள் வந்தது போல உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது.. உடனே அருகிலிருந்த ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர் அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டனர். அப்போது செந்தில் கணேஷ் அங்கிருக்கும் திருநீறை எடுத்து புஷ்பவனம் குப்புசாமி நெத்தியில் வைத்தார்.. அப்போதும் புஷ்பவனம் ஆவேசமாக சத்தம் போட்டார்.
புஷ்பவனம் குப்புசாமி
இதைப்பார்த்து அரங்கமே நடுநடுங்கி போனது.. பிறகு சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வந்த புஷ்பவனம் குப்புசாமி, இந்த பாட்டை கேட்கும்போது எனக்குள் ஏதோ செய்துவிட்டது, யாரும் தப்பா நினைக்காதீங்க.. மன்னித்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இந்த எபிசோட் இணையத்திலும் அப்போது வைரலாகிய நிலையில், ஒருசாராரிடம் பல்வேறு எதிர் விமர்சனங்களை இன்னமும் பெற்று வருகிறது.
அந்தவகையில், Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "விஜய் டிவியில் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு சாமி வந்துள்ளது.. அவரிடம் அங்கிருந்தவர்கள் அனைவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.. இது செட்டப்புதான்.. அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் சரியாக போவதில்லை போல.. அதனால்தான், இப்படியெல்லாம் செய்கிறார்கள்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
இதுவரை இப்படியான செய்திகள் சூப்பர் சிங்கரில் வந்ததில்லையே? இது மட்டும் எப்படி செய்தியாக வெளியே வருகிறது? அந்த நிகழ்ச்சி சரியாக போகவில்லை என்பதே இதன் அர்த்தம். இதற்காக விளம்பரம் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. சாட்டிலைட் மீடியாக்கள், டிஜிட்டல் மீடியாக்களை விளம்பரத்துக்காக நம்பியிருக்கின்றன.
சாமியாடுவது என்பதில் பெரும்பாலும் பெண்கள்தான் ஆடுவார்கள்.. ஆனால் அப்போதெல்லாம் கிராமங்களில் சாமியாடி என்றே தனியாக நபர்கள் இருப்பார்கள்.. இவர்கள் சொல்வதெல்லாம் அப்படியே நடக்கும்.. இன்று இப்படியான நபர்கள் அவ்வளவாக இல்லை.
மூடநம்பிக்கை சட்டம்
குறி சொல்பவர்களும் இன்று கிடையாது.. நன்றாக குறி சொல்வார்கள்.. அப்படி சொல்வதெல்லாம் அன்று நடந்தும் உள்ளது. இப்போது குறி சொல்பவர்களை காணவில்லை. அதேபோல ஆணுக்கு பேய் பிடித்ததாக சொல்வதில்லை.. பெண்ணுக்கு மட்டுமே பேய் பிடித்ததாக சொல்வார்கள்..
சமீபத்தில் சட்டமன்றத்தில், மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது நல்ல விஷயம்தான். ஆனால், எது மூடநம்பிக்கை என்பதை வரையறுக்க வேண்டும்.. உதாரணத்துக்கு நம்ம ஊரில் சுமங்கலி பெண்கள் மல்லிகைப்பூ வைத்துக் கொள்வார்கள். ஆனால், பஞ்சாப்பில் மல்லிகைப்பூ வைத்தால், அந்த பெண் விதவை என்று அர்த்தம். எனவே ஒரு சமூகத்து நம்பிக்கை, இன்னொரு சமூகத்துக்கு மூடநம்பிக்கையாகும் என்பதால், இதை தெளிவாக வரையறுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அறிவியலுக்கு எதிரானது
அதேபோல, 4 நாட்களுக்கு முன்பு, Jeeva Today என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஜீவ சகாப்தன், "சாமியாடுவது என்பதே அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு எதிரானது.. இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது.. சாமியாடுவதற்கு மன அழுத்தம் தான் காரணம், என்பதை உளவியல் நிபுணர்கள் பலர் சொல்லி உள்ளார்கள்..
நாட்டில் விவசாயிகளுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதை பார்த்து சாமி இறங்கவில்லை? சாதி கொடுமைகள், ஆணவ கொலைகள் நடக்கும்போது சாமி இறங்கவில்லையா?
வளரும் டெக்னாலஜி
கடலூர், நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் வடஇந்தியர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.. நம் தொழிலாளர்களுக்காக மனமிறங்காமல், விஜய் டிவியில், ஏசி ரூமில், நிகழ்ச்சி நடத்துவோரிடம் சாமி வந்துள்ளது.. சாமியாடிதுமே 2 பெண்கள் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.. பிறகு தன்னையும் அறியாமல் சாமியாடியதற்காக மன்னிப்பும் சொல்கிறார்.
இதையெல்லாம் நிகழ்ச்சியில் சொல்லி என்ன சித்தரிக்க முயல்கிறார்கள்? உலகம் நானோ டெக்னாலஜி, ஏஐ டெக்னாலஜி என்று சென்று கொண்டிருந்தால், சினிமா, ஊடகங்களை வைத்து மீண்டும் மக்களை பிற்போக்குக்கு இழுத்து செல்வதா? இதற்காகத்தான் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்று ஜீவா பேசியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications