Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸில் இருக்கும் ரட்சிதாவிற்காக அவருடைய கணவர் செய்த செயல்.. அப்போ எல்லாமே பொய் தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தது விட்டதாக பரபரப்பாக பரவி வந்த வதந்திக்கு தற்போது சின்னத்திரை நடிகை ரட்சிதாவின் கணவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ரட்சிதாவிற்கு அவருடைய கணவர் கூறிய வாழ்த்து செய்தி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீனாட்சி இப்போ பிக் பாஸில்

மீனாட்சி இப்போ பிக் பாஸில்

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த சீசனில் பல போட்டியாளர்கள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே களம் இறங்கி இருக்கின்றனர். ரசிகர்கள் ஆரம்பம் முதலே உச்சரித்த போட்டியாளர்களின் பெயர்களில் ஒன்று ரட்சிதா மகாலட்சுமி. இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு பரீட்சையமானவர்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான சீரியல்லான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக இப்ப வரைக்கும் ரசிகர்களின் மனதில் மீனாட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரட்சிதா பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இது ஆறுதல் செய்தி தான்

இது ஆறுதல் செய்தி தான்

ஏற்கனவே ரட்சிதா நடித்து வந்த ஒரு சில சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டு வந்ததால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ரட்சிதாவும் வருத்தத்தில் இருந்து வந்தார். ஒரு சில வாரங்களுக்கு முன்பு இவர் கடைசியாக நடித்து வந்த இது சொல்ல மறந்த கதை எனும் சீரியல் திடீரென்று முடிக்கப்பட்ட வருத்தத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக தனியார் சேனலை வறுத்தெடுத்திருந்தார் .இந்த நிலையில் தான் புதிய ஒரு ப்ராஜெக்ட் தொடங்கி இருப்பதாக அவர் அப்போதே கூறியிருந்தார்.அதற்கு முன்பு இருந்தே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பல ரசிகர்கள் இவரிடம் கமெண்ட்ஸ்களில் கேட்டு வந்தனர். ஆனால் அப்போதெல்லாம் பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்து வந்த ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளில் இவர் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பரவி வந்த வதந்தி

பரவி வந்த வதந்தி

ரட்சிதா மகாலட்சுமி மற்றும் அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக் இருவரும் சீரியல் பிரபலங்கள் தான் ரட்சிதா முதல் முறையாக நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலின் கதாநாயகனாக நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .திருமணத்திற்கு பிறகு இருவரும் பிசியாக இருந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் சீரியலில் மீண்டும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இருவரும் தனித்தனி சீரியல்களில் நடித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகப் போவதாகவும் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.

கணவரின் வாழ்த்து

கணவரின் வாழ்த்து

இந்த வதந்தி குறித்து இவர்கள் இருவரின் தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. தற்போது ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்து கூறி தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். அதில் வாழ்த்துக்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று நல் உள்ளங்களின் வாழ்த்துக்களையும் பெறுவீர்கள் என்று வாழ்த்துக் கூறி போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்.இந்த பதிவுதான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் தற்போது பேசிக்கொள்வதில்லை தனித்தனியாக இருக்கிறார்கள் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தினேஷ் வெளியிட்ட பதிவு அது எல்லாம் பொய் என்று கூறும் வகையில் இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+