Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிரிக்கோ உதயா வீட்டில் விசேஷம்.. லொல்லு சபா புகழ் நடிகரின் மகளுக்கு திருமணம்.. பிரபலங்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி, ஒரு காலையும் இழந்து, உயிருக்கு போராடி, ஒருவழியாக மீண்டு வந்தவர்தான் லொல்லு சபா நடிகர் உதயா.. இன்று தன்னுடைய செல்ல மகளுக்கு திருமணம் செய்துள்ளார்.. இந்த திருமணம்தான் இன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது...!!

சின்னத்திரை வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் 'சிரிக்கோ' உதயா...சந்தானம், யோகி பாபு, சுவாமிநாதன் போன்ற பல முன்னணி கலைஞர்களை உருவாக்கியது இந்த நிகழ்ச்சிதான் என்பது அனைவரும் அறிந்ததே..

Vijay TV Lollu Sabha

சிரிக்கோ உதயா

இதே நிகழ்ச்சியில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர் சிரிக்கோ உதயா.. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தடம் பதித்து வருகிறார். நடிப்பையும் தாண்டி சிறந்த வயலின் கலைஞராகவும், பல படங்களுக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதும் திறமை படைத்தவராகவும் விளங்கியவர் சிரிக்கோ உதயா..

சின்னத்திரை மட்டுமல்லாமல் சினிமாவையும் தாண்டி, 35 வருடங்களாக இசை துறையில் வயலின் வாசித்திருக்கிறார் சிரிக்கோ உதயா. 15 வருடங்கள் சந்தானத்துடன் இருந்து அவருடன் காமெடி ஸ்கிர்ப்ட்களில் பணியாற்றியிருக்கிறார்.

சர்க்கரை நோய் - கால் பாதிப்பு

ஆனால் சமீபகாலமாக சர்க்கரை நோயின் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த உதயா, சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், நோயின் தாக்கம் மற்றும் ரத்த ஓட்ட பாதிப்பு காரணமாக அவரது இடது காலின் முட்டிக்கு கீழ் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மகள்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

உதயாவுக்கு கால் அகற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி கேள்விப்பட்டதுமே, உதயாவின் மூத்த மகள் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில் அவர் சொல்லும்போது, "இரண்டு மாதங்களாகவே என் அப்பாவின் உடல்நிலை சீராக இல்லை.. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.. சில ஊடகங்களில் வலது கால் என்று தவறான செய்தி பரவுகிறது.. உண்மையில் இடது கால்தான் எடுக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.

செல்ல மகளுக்கு திருமணம்

திரையுலகினருக்கு இந்தத் தகவலை தெரிவிக்காமல் குடும்பத்திற்குள்ளேயே வைத்துக்கொள்ள நினைத்தாலும், உதயாவின் நட்பு வட்டாரத்தில் உள்ள நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்து தங்களால் இயன்ற உதவிகளை செய்திருந்தது நினைவிருக்கலாம்..

இப்படி உயிருக்கு கடுமையாக போராடிய நிலையில், தன்னுடைய தன்னம்பிக்கையால் மீண்டு வந்தார் சிரிக்கோ உதயா.. இப்படிப்பட்ட சூழலில்தான் தன்னுடைய மகளுக்கு இன்று திருமணம் செய்துள்ளார் உதயா..

பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் உதயாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.. இதில், இளைய மகளுக்குதான் இன்று திருமணம் நடந்துள்ளது.. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பாரும் கலந்து கொண்டுள்ளனர்..

பிரபலங்களை மகிழ்ச்சியுடன் உதயா வரவேற்க, மணமக்களுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.. லொல்லு சபா நடிகர் பழனியப்பனும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்.. இது சம்பந்தமான போட்டோவையும் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+