Mr and Mrs சின்னத்திரை 5: ஒரே குடும்பத்தில் அம்மாவும் மகனும்.. போட்டியாளர்கள் யாரெல்லாம்னு பாருங்க
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் என்ற தகவல்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து பல சீசன்கள் தொடங்கி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இந்த நிலையில் கணவன் மனைவியாக இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு விளையாடுவார்கள். அதில் பல போட்டிகளும், சவால்களும் இருந்தாலும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கும். மக்களுக்கு பரிச்சயமான பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் இதற்கு அதிகமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் நிஷா தொகுத்து வழங்கி வருகிறார்கள். நடுவராக நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி இருப்பார்கள். இந்த நிலையில் நான்கு சீசன்களை கடந்து இப்பொழுது ஐந்தாவது சீசன் தொடங்கி வரும் நிலையில் இதில் நடிகை ராதா தேவதர்ஷினிக்கு பதிலாக கலந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல கடந்த நான்காவது சீசனில் மகாலிங்கம் ராஜேஸ்வரி ஜோடி டைட்டில் வின்னராக தேர்வானார்கள். இந்த டைட்டில் வின்னர் ஜோடிக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மகாலிங்கம் பின்னணி பாடகர் என்பதும் அவருடைய மனைவி இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகி கொண்டு வருகிறது. இதில் முதல் 5 போட்டியாளர்கள் விபரம் ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் நாஞ்சில் விஜயன் அவருடைய மனைவி மரியா முதல் போட்டியாளராக அறிமுகம் ஆகிறார்கள். அவர்களை தொடர்ந்து இந்திரஜா மற்றும் கார்த்திக், நவீன் மற்றும் சௌமியா, ஆஷிக் மற்றும் ஜோனு, மீரா கிருஷ்ணன் மற்றும் சிவக்குமார் தம்பதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதில் சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அம்மாவாக நடித்த மீரா கிருஷ்ணன் அவருடைய கணவர் சிவகுமாரோடு கலந்து கொள்கிறார். மீரா கிருஷ்ணனுக்கு மகனாக கார்த்திக் கேரக்டரில் நடித்த நவீன் அவருடைய மனைவி சௌமியாவோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications