பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் நேரம் மாற்றப்படுகிறதா? இதுதான் காரணமா? இப்படி ஒரு டுவிஸ்டா?
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் டிவியில் இன்றுடன் கிழக்கு வாசல் சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. அதுபோல அடுத்த வாரத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு பதிலாக புது சீரியல்கள் வரும் வரைக்கும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் மதிய நேரத்திலும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் முதல் பாகம் 5 வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்தனர். அதிலும் அண்ணன் தம்பியின் ஒற்றுமையை மையப்படுத்திய இந்த சீரியலின் கதை கடைசி நேரத்தில் கொஞ்சம் சொதப்பலையும் சந்தித்திருந்தது.
அதாவது எல்லா மருமகள்களும் அடுத்தடுத்து கர்ப்பமானது, அதைத் தொடர்ந்து குழந்தை பிறப்பு என்று சில சொதப்பல்கள் இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் பெரிய அளவில் இந்த சீரியல் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருந்தது. இப்படியான நிலையில் இந்த சீரியல் முடிவடைந்ததும் அதே பெயரில் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. முதல் பாகம் ஒளிபரப்பான 8:30 மணிக்கு இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே சீரியல் எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்த நிலையில் இரண்டாவது பாகமும் மக்கள் மத்தியில் இப்போது பிடிக்க தொடங்கிவிட்டது. அதில் முதல் பாகத்தில் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டதாக இருந்தாலும், இப்போது இரண்டாவது பாகத்தில் அப்பா மகன்களின் பாசம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மகா சங்கமம் நடைபெற்றது. அப்போது ராஜி மற்றும் கதிருடைய திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து இந்த சீரியலின் விறுவிறுப்பு கூடி இருக்கும் நிலையில் இப்போது சரவணன் மற்றும் தங்கமயில் திருமண டிராக் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் இனி மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதாவது விஜய் டிவியில் இன்றுடன் ரேடான் நிறுவனம் தயாரிப்பில் வெளியான கிழக்கு வாசல் சீரியல் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் ஒளிபரப்பான நேரத்தில் ஒளிபரப்பாக இன்னும் புதிய சீரியலுக்கான அப்டேட் ப்ரோமோ வெளியாகாமல் இருக்கும் நிலையில், புதிய சீரியல் ஒளிபரப்பாகுற வரைக்கும் மதியம் 1:30 மணிக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பாகும்.
பிறகு மீண்டும் பிரேம் டைமில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. புதிய சீரியல் தொடங்கும் வரை ஒரே நாளில் இரண்டு முறை இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் பிறகு மீண்டும் பிரேம் டைமில் மட்டும் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவல்கள் விஜய் டிவி தரப்பில் இருந்து என்னும் உறுதிப்படுத்த விடவில்லை. இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications