பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: குமாருக்கு ஆப்பு வைத்த அரசி.. பயத்தில் இருக்கும் தங்கமயில்! கோமதி கண்டுபிடிக்கும் உண்மை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூன் 21ஆம் தேதி எபிசோடில் தன்னை பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்த குமாரை அரசி சரியாக பழிவாங்கி இருக்கிறார். அதே நேரத்தில் கோமதியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தங்க மயிலுக்கு பயம் ஏற்படுகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அரசியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் குமாரிடம் அரசி தான் டிரஸ் எடுக்க வேண்டும் என்று சொன்னதால் கடுப்பாகிய குமார் அவரை ஒரு துணிக்கடையில் கொண்டு இறக்கி விடுகிறார். அங்கே நீ டிரஸ் எடுத்துக்கொண்டு இரு இப்போ நான் வரேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வரும் குமார் தன்னுடைய அப்பா சக்திவேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

Pandian Stores Vijay TV

பழிவாங்கும் படலம்

அரசியை பழிவாங்க தான் பண்ணியதை சொல்கிறார். பாண்டியன் முன்பு அவளை கொட்டி கடுப்பேற்றினேன் ஆனால் அவள் சாம்பார் ஊத்திட்டா, என்று சொல்ல ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லல என்று சக்திவேல் கோபப்படுகிறார். அதற்கு எப்படி எல்லாரும் முன்னாடியும் சொல்ல முடியும் என்று குமார் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு இப்போ வந்தது கூட அரசியை பழிவாங்க தான். நான் டிரஸ் கடையில் விட்டு விட்டு வந்தேன் என்று சொல்ல, சக்திவேல் எப்படி பழிவாங்க போற என்று கேட்கிறார்.

அப்பா கொடுத்த அட்வைஸ்

அவ டிரஸ் எடுத்துட்டு காசு கொடுக்க இல்லாம முழிப்பா என்று சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறான். அதற்கு சக்திவேல் நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ ஆனால் அந்த பாண்டியன் பொண்ணு கஷ்டப்படறதை பார்த்து அந்த பாண்டியன் துடிக்கணும். இப்போ உங்க பெரியப்பா கூட நம்ம பக்கம் இல்ல, அவர் இப்போ நல்லவரா மாறிட்டாரு அதனால கொஞ்சம் பார்த்து பண்ணு என்று சக்திவேல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

குமாரவேலுக்கு ஏமாற்றம்

அந்த நேரத்தில் அரசி துணியை எடுத்துவிட்டு குமாரை தேட அவர் கடையில் இல்லாமல் இருக்கிறார். அங்கு வரும் பெண் பில்லு போட்டாச்சு என்று பில்லை கொடுத்து விட்டுப் போக, முதலில் அதை பார்த்து அரசி அதிர்ச்சியாகி தயங்குகிறார். பிறகு கார்டை எடுத்துக் கொடுத்து பின் நம்பரை போடுகிறார். அப்போது 17,000 கட்டி முடிக்க குமாருக்கு மெசேஜ் வருகிறது. அதை பார்த்ததும் குமார் அதிர்ச்சியாகி கத்துகிறார். என்ன ஆச்சு என்று சக்திவேல் கேட்க, என் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுத்துருக்காங்க என்று சொன்னதும், எங்கிருந்து எடுத்திருக்காங்க பாரு என்று சொல்கிறார்.

மாஸ் காட்டிய அரசி

அரசியை இறக்கிவிட்ட கடையில் இருந்து பணம் எடுத்து இருக்காங்க என்று குமார் சொல்ல, நீ அவகிட்ட கார்டை கொடுத்துவிட்டு தான் இங்க வந்து இவ்வளவு பேசுறியா என்று சக்திவேல் திட்ட, அதற்கு இல்லப்பா என்று சொல்லிவிட்டு குமார் காரை எடுத்து வேகமாக அரசியை இறக்கி விட்ட ஷோரூமுக்கு வருகிறார். அப்போது அரசி அவரிடம் உங்களை எப்படி வர வெச்சேன் பாத்தீங்களா? என்று திமிராக கேட்க, என்னுடைய கார்டு உன்கிட்ட எப்படி கிடைத்தது என்று குமார் கேட்கிறார்.

பயத்தில் தங்கமயில்

நான் தான் உங்க பர்ஸிலிருந்து எடுத்தேன் என்று அரசி சொன்னதும், நம்பர் எப்படி போட்ட என்று கேட்க எந்த லூசாவது போனில் நம்பரை சேவ் செய்து வைப்பானா? அதனால்தான் நான் எல்லா நம்பரையும் தெரிஞ்சுகிட்டேன் என்று சொல்ல குமார் அதிர்ச்சியாகி இருக்கிறார். அதோடு இந்த கார்டை நீங்க என்கிட்ட இருந்து கேட்டாலோ, அல்லது நம்பர மாற்றினாலோ அந்த போலீசிடம் சொல்லிடுவேன் என்று அரசி மிரட்டுகிறார். மறுபக்கத்தில் தங்க மயிலும் கோமதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இருவரும் குழந்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தங்கமயில் தன்னை மீண்டும் வேலைக்கு போக சொல்லி விடுவார்களோ? என்ற பயத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+