விஜய் டிவி நடிகைக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.. மாப்பிள்ளை இந்த பிரபலம்தான்! குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைக்கு நேற்று திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமான நபர்களாக மாறிவிடுகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தால் கூட அவர்களை அடிக்கடி பார்ப்பதால் ரசிகர்கள் இவர்கள் இந்த சீரியலில் இந்த கேரக்டரில் நடித்தவர் தானே என்று எளிமையாக அடையாளம் கண்டு விடுகிறார்கள்.

அதிகரிக்கும் பிரபலம்
திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு கிடைக்கும் பிரபலத்தை விட சீரியல் நடிகர்களுக்கு தான் இப்போது அதிகமான பிரபலம் கிடைக்கிறது. அதனாலேயே அதிகமானார் சின்னத்திரையில் அறிமுகம் ஆக விரும்புகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பதற்காகத்தான் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் இப்போது சின்னத்திரையின் அறிமுகமானாலும் வெள்ளித்திரையில் அமோகமான பிரகாசம் இருக்கிறது என்று பலருக்கு புரிந்து விட்டது. இதற்கு சாட்சியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பல நடிகர்களும் நடிகைகளும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மது கேரக்டர்
அதுபோல சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் பலரும் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை த்ரோஷினி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான கனா சீரியல் வில்லி கேரக்டரில் நடித்து இருந்தார். அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலிலும் மது கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகைக்கு திருமணம்
இவருக்கு தான் நேற்று திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர் சத்தியா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். அவருடைய திருமண வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே நீ நான் காதல் சீரியலில் இப்போது முக்கியமான திருப்பங்கள் வந்திருக்கிறது.

முக்கிய திருப்பம்
ஆகாஷ், அபி, அணு மூன்று பேரும் பிளான் போட்டு ஒரு பெண்ணை வீட்டிற்கு வர வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண் முரளி காதலித்தவர் என்று நடிப்பதற்காக வந்திருக்கிறார். முரளிக்கு பழைய ஞாபகம் எதுவும் மறக்கவில்லை அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக அனு மற்றும் அபி எடுத்து இருக்கும் இந்த முயற்சி வெற்றி பெறுமா? அல்லது முரளி ராகவ் மற்றும் அபியை பிரிப்பதற்காக செய்யும் சூழ்ச்சியில் அபி சிக்குவாரா என்ற எதிர்பார்ப்பில் இந்த சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது.
குவியும் வாழ்த்துக்கள்
அதுபோல இந்த சீரியலில் முரளியின் மனைவியாக நடித்துக் கொண்டிருந்த நடிகைக்கு சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதற்கு பிறகு அவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது திருமணம் முடிந்திருக்கும் த்ரோஷினிக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications