பாண்டியன் ஸ்டோர்ஸ்: வீட்டை விட்டு போன பாண்டியன்.. கடைசியாக போட்ட அந்த கட்டளை.. அதிர்ச்சியில் மகன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலின் மார்ச் 20ம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அரசியின் காதல் விஷயம் தெரிந்து பாண்டியன் விபரீதம் முடிவு எடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த அதிரடியான கதைகளம் இப்போது வந்துவிட்டது. அரசி கோமதியின் அண்ணன் மகனான குமாரவேலை காதலிக்கும் விஷயம் குடும்பத்திற்கு எப்படியும் சில மாதங்கள் கழித்து தான் தெரியும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் திடீரென இவர்களுடைய காதல் விஷயம் சரவணன் மூலமாக குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது.

மனம் வெறுத்த பாண்டியன்
இந்த சீரியலில் பாண்டியன் ஆக நடிக்கும் நடிகர் ஸ்டாலின் முத்து கடந்த வாரத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பாண்டியன் சோகத்தின் உச்சத்தில் வாழ்க்கையை வெறுத்து மழையில் நனைந்தபடி வீட்டை விட்டு வெளியேறி தெருவில் நடப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால் அரசியின் காதல் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வரும் என்று நாம் போன வாரமே ஒரு செய்தியை கொடுத்திருந்தோம். அது இப்போது நடந்து விட்டது.
அதிரடியான மாற்றம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இரண்டாவது பாகத்தில் அதிரடியாக களம் இறங்கி இருக்கிறார்கள். அதனால் இனி சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசியின் காதல் விஷயம் சுகன்யாவிற்கு ஏற்கனவே தெரியும் என்பதை அரசி சொல்லவில்லை.
அரசிக்கு விழுந்த அடி
அது போல அரசியை மொத்த குடும்பத்தினரும் ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கும் போதும் அரசி நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் நான் குமாரவேலை காதலித்தேன் என்றும் சொல்லவில்லை அதுபோல அரிசியின் அண்ணன்கள் குமாரவேலின் வீட்டிற்கே சென்று அவரை அடித்து உதைத்திருக்கிறார்கள்.

குமாரவேல் அப்பா பேச்சு
அதற்கு குமாரவேலின் அப்பா என் பையன் தப்பு பண்ணுனவனா இருந்தாலும் உன் தங்கச்சிக்கு அறிவு எங்க போச்சு? அவன் கூப்பிட்டா இவ படம் பார்க்க போயிருவாளா? எதுக்காக அவன் கொடுத்த மோதிரத்தை வாங்குனா என்று அரசியையும் அசிங்கமாக பேசிய அனுப்பி இருக்கிறார். இதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

பாண்டியன் போட்ட கட்டளை
ஏற்கனவே இரண்டு குடும்பத்திற்கும் பெரும் பிரச்சனை இருக்கிறது. இதில் இப்போது புதிய பிரச்சனை வந்திருக்கிறது. இதனால் எதுவும் பேசாமல் உடைந்து போய் இருந்த பாண்டியன் இப்போது வெளியான ப்ரோமோவில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவரை குடும்பத்தினர் எல்லோரும் தடுத்து நிறுத்துகிறார்கள். அதற்கு அவர் எனக்கு மனசு சரியில்ல நான் நிம்மதியா இருக்கணும்னா யாரும் என் பின்னாடி வரக்கூடாது நீங்க என் மேல உண்மையான மரியாதையும் பாசமும் வைத்திருந்தால் என்னை தேடி வராதிங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
டிஆர்பி லிஸ்ட்
பிறகு தெருவில் அவர் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது மழை பெய்கிறது. மழையில் நனைந்தபடியே ஒரு இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் அவரை காணவில்லை என்பதால் அவருடைய மகன்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியலின் டிஆர்பி குறைந்து கொண்டிருந்த நிலையில் இந்த வாரத்தில் பத்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
கோமதியின் நடிப்பு
அதுபோல இந்த வாரத்திற்கான டிஆர்பி முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகும். அதில் மேலே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காரணம் இந்த வாரம் முழுக்க பரபரப்பான காட்சிகள் தான் இருந்தது. இந்த வாரத்தில் கோமதி அழகான நடிப்பு மற்றும் இயல்பான வசனங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனாலும் பாண்டியனின் முடிவால் நாளைக்கு குடும்பத்திற்குள் என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications